கோவை பார்க் பொறியியல் கல்லூரியின் பொன் விழா - மயில்சாமி அண்ணாதுரைக்கு விருது வழங்க உள்ளார் கமல்ஹாசன்

கோவையில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பொன் விழா வரும் 22ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் பங்கேற்று டாக்டர் மயில்சாமி அண்ணாதுரைக்கு விருது வழங்குகிறார்.


கோவை: டாக்டர் மயில்சாமி, உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சந்திரயான்-3ல் பணியாற்றிய முன்னாள் மாணவர்களுடன் பொன்விழா கொண்டாடப்படவுள்ளது.

கோவையில் பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பொன் விழா வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், துணைத் தலைவருமான டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொள்கிறார். சந்திரயான்-3 இல் பணியாற்றிய முன்னாள் மாணவர்கள் மற்றும் கோவையைச் சேர்ந்த 300 ஆசிரியர்களுடன் இந்த பொன்விழா கொண்டாடப்படுகிறது.



இந்தவிழாவில், நிலவு மனிதன் என்று போற்றப்படும் மயில்சாமி அண்ணாதுரைக்கு நடிகர் கமல்ஹாசன் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...