கோவை பார்க் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா - நீயா நானா புகழ் கோபிநாத் பங்கேற்பு

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரி மற்றும் பார்க் கட்டிடக்கலை கல்லூரியின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் கருமத்தம்பட்டி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


கோவை: பார்க் பொறியியல் கல்லூரி விழாவில் நீயா நானா புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலாமாண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு பொறியியல் கல்லூரி, பார்க் தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு கட்டிடக்கலை கல்லூரி மற்றும் பார்க் கட்டிடக்கலை கல்லூரி யின் முதலாமாண்டு பொறியியல் மாணவர்கள் வரவேற்பு விழா பார்க் கல்வி குழுமத்தின் சார்பில் கருமத்தம்பட்டியில் உள்ள வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.



பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. P. V. ரவி அவர்களின் தலைமையில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி அவர்களின் வழிகாட்டுதலில் நீயா நானா புகழ் கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதலாமாண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

கவுரவ விருந்தினர்களாக பார்க் கல்வி குழுமத்தின் முன்னாள் மாணவர்கள். ஹுசைன் அஹமத், MD, சேரன் அகாடமி, கோவை மற்றும் மிருதுபாஷிணி, மூத்த மனித வள மேலாளர், நல்லாஸ் தொழில்நுட்பம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பு சேர்த்தனர்.

பார்க் பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. லக்ஷ்மணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr. கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய கோபிநாத், காலையில் முதல் 20 நிமிடங்களே உங்களது எதிர்கால வாழ்வை தீர்மானிக்கின்றது. ஆகவே காலையில் அலைபேசியை கையில் எடுக்கவேண்டாம். நேர்மறையாக சிந்திக்க உங்கள் மூளையை பழக்கிக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு போதை பழக்கத்திற்கும் ஆளாகாதீர்கள். எல்லாவற்றினும் மேலாக நீங்கள் இந்த நிலையை அடைவதற்கு உங்கள் பெற்றோரின் உழைப்பும், தியாகமும் என்பதை மறவாதீர்கள் என்று தனது எழுச்சிமிகு பேச்சால் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தனது சிறப்புரையில் மாணவர்களை சிந்திக்க வைத்த பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி, விருப்பமுள்ள மாணவர்கள் தங்கள் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்..

இந்த நிகழ்ச்சியில் கல்லூரிகளின் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.பார்க் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் Dr. அங்காளபரமேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...