விநாயகரும், விஞ்ஞானமும் - ரோபோ மூலம் விநாயகருக்கு அர்ச்சனை செய்து அசத்திய கல்லூரி மாணவர்கள்!

கோவையில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு ரோபோ மூலம் அர்ச்சனை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகருக்கு ரோபோ மூலம் தீபாராதனை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தங்களில் வைரலாகி வருகிறது.

கோவையில் உள்ள கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்கள் விநாயகர் சிலை வைத்து விநாயகனை வழிபட்டிருக்கின்றனர்.



அப்போது பொறியியல் துறையான மெக்கட்ரானிக்ஸ் துறை மாணவர்களால், உருவாக்கப்பட்ட ரோபோ விநாயகருக்கு தீப ஆராதனை காட்டியது.

விநாயகருடன் விஞ்ஞானமும் இணைந்து பக்தர்களை பரவசப்படுத்தியது. குறிப்பிட்ட இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...