கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தேசிய மாணவர்‌ படை முகாம்‌

கோயம்புத்தூரில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பத்து நாட்களாக நடைபெற்ற தேசிய மாணவர்‌ படை (5TN) பெண்கள்‌ பிரிவிற்கான ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம்‌ (CATC) மற்றும்‌ குடியரசு தின பயிற்சி முகாம்‌ (RDC) நிறைவு பெற்றது.


கோவை: ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாமில்‌ (CATC) 321 மாணவர்களும்‌, குடியரசு தின பயிற்சி முகாமில்‌ (RDC) 222 மாணவர்களும்‌ மொத்தமாக 70 பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளிலிருந்து 543 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கோயம்புத்தூரில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தேசிய மாணவர்‌ படை (5TN) பெண்கள்‌ பிரிவிற்கான ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாம்‌ (CATC) மற்றும்‌ குடியரசு தின பயிற்சி முகாம்‌ (RDC) 04/09/2023 முதல்‌ 13,09,2023 வரை நடத்தப்பட்டது.

இந்த முகாமின்‌ படைத்தலைவரான லெப்டினன்ட்‌ கர்னல்‌ ஜே. எம்‌. ஜோஷி அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌ கீழ்‌ நடத்தப்பட்டது. மேலும்‌ மேஜர்‌ ஸ்ரீப்ரியா, சுபேதார்‌ மேஜர்‌ நாசிப்சிங்றானா, மாணவர்‌ நலமையத்தின்‌ தலைவர்‌ முனைவர்‌ ந. மாகதம்‌ ஆகியோர்‌ முகாமின்‌ தொடக்க விழாவில்‌ கலந்துகொண்டனர்‌. முனைவர்‌ ந. மாகதம்‌ அவர்கள்‌ முன்னாள்‌ ராணுவ வீரர்‌ மகளாக இருந்து முகாமை நடத்தியதில்‌ மிகுந்த மகிழ்ச்சியைப்‌ பகிர்ந்துகொண்டார்‌.



ஒருங்கிணைந்த வருடாந்திர பயிற்சி முகாமில்‌ (CATC) 321 மாணவர்களும்‌, குடியரசு தின பயிற்சி முகாமில்‌ (RDC) 222 மாணவர்களும்‌ மொத்தமாக 70 பள்ளிகள்‌ மற்றும்‌ கல்லூரிகளிலிருந்து 543 மாணவர்களும்‌ இவர்களுடன்‌ கோயம்புத்தூர்‌ மற்றும்‌ அதைச்‌ சார்ந்த 5TN பெண்கள்‌ பிரிவு பயிற்சியாளர்கள்‌, தேசிய மாணவர்‌ படை நிர்வாகிகள்‌ (ANO), நிரந்தர பயிற்சிவிப்பாளர்கள்‌ (PIStaffs) ஆகியோர்‌ பங்கேற்றனர்‌.



முகாமின்‌ போது, கர்னல்‌ பி. வி. எஸ்‌. ராவ்‌ குழு தலைவர்‌ மாணவர்கள்‌ மேற்கொள்ளும்‌ பயிற்சிகளை ஆய்வு செய்தார்‌. இந்த பத்து நாட்கள்‌ மாணவர்கள்‌ ராணுவப்‌ பயிற்சியில்‌ ஈடுபட்டனர்‌. அது அவர்களது தலைமைத்துவம்‌ மற்றும்‌ தன்னம்பிக்கை போன்ற சேவைப்‌ பண்புகளை வளர்க்கும்‌. மாணவர்கள்‌ குழுப்பணி, சாகசம்‌, உடல்‌ சகிப்புத்தன்மை ஆகியவற்றை கற்றுக்கொண்டனர்‌. மாணவர்களுக்கு சுய ஒழுக்கம்‌ மற்றும்‌ தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது. இது ஒன்றாக வாழ்வதற்கும்‌, அதன்‌ மூலம்‌ அவர்களுக்குள்‌ குழுமனப்பான்மை, தோழமை, சமூக மேம்பாடு மற்றும்‌ சேவை போன்ற கருத்துக்களை வளர்ப்பதற்கும்‌ வாய்பளிக்கிறது.

ஆயுதப்பயிற்சி, துப்பாக்கிச்சூடு, வரைபட வாசிப்பு, ஆளுமை மேம்பாட்டு வகுப்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகள்‌ மற்றும்‌ விளையாட்டு நிகழ்வுகள்‌ என பத்து நாட்கள்‌ நடைபெற்ற பல்வேறு பயிற்சிகளில்‌ பங்கேற்று முகாமின்‌ நோக்கங்களை மாணவர்கள்‌ அனுபவ பூர்வமாக உணர்ந்தனர்‌.

பயிற்சியின்‌ நிறைவு விழாவில்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌. வெ. கீதாலட்சுமி மாணவர்களுக்கு முகாமின்‌ மகத்துவம்‌ பற்றியும்‌, அது இன்றைய மாணவர்களை செம்மைப்படுத்தும்‌ முகாமாகவும்‌ அமைந்தது என்றும்‌ வாழ்த்திப்பேசி பல்வேறு போட்டிகளில்‌ பங்கேற்ற மாணவ, மாணவியர்க்கு சான்றிதழ்‌ வழங்கினார்‌.

முகாம்‌ துணை அகிகாரி முகாமின்‌ அறிக்கையை மேஜர் முனைவர்‌. சு. மனோன்மணி அவர்களும்‌, முகாமின்‌ முடிவுரை கருத்துக்களை கர்னல்‌ G. M. ஜோதி (முகாமின்‌ கட்டளையிடும்‌ அதிகாரி) அவர்களும்‌ தெரிவித்தனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...