கற்பகம் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்ப கல்லூரியில் நடப்பாண்டில் புதிதாக சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, New Bie'23 என்ற பெயரில் நடைபெற்றது. இதில் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் அறிவுரைகளையும் வழங்கினர்.


கோவை: ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்ப கல்லூரியில் நடப்பாண்டில் புதிதாக சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள கற்பகம் தொழில்நுட்ப கல்லூரியில் 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில், New Bie'23 என்ற நிகழ்வு இன்று (செப்.13) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கற்பகம் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரா.வசந்தகுமார் தலைமை தாங்கினார். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் முனைவர் ச.பத்மநாபன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.மணிமாறன் தலைமையுரை ஆற்றினார். முதல்வருடன், முனைவர் த.பானு, துணை முதல்வர், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு புதிய மாணவர்களை வரவேற்றனர்.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முனைவர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார். அவரது உரையில் இளம் மாணவர்களை தைரியமாகவும், தனித்துவமாகவும் இருக்குமாறு ஊக்குவித்தார். மேலும் மாணவர்களின் அணுகுமுறை மற்றும் துறை சார்ந்த அறிவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் வலியுறுத்தினார்.



நிகழ்ச்சி நிறைவடைந்தவுடன், மாணவர்கள் புதிய உற்சாகத்துடனும் நோக்கத்துடனும், கற்பகம் தொழில்நுட்பக் கழகத்தில் தங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்கத் தயாராகினர். இந்த இளம் மனதை வளர்ப்பதற்கும் அவர்களின் கல்வி மற்றும் தொழில் இலக்குகளை அடைய அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் நிறுவனம் உறுதியுடன் உள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...