கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் புல முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கோலாகலம்..!!

கோயம்புத்தூர் ஈச்சனாரியிலுள்ள கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் புல முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில் இஸ்ரோ அமைப்பின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு புதுபுது அனுபவங்களை தெரிவித்தார்.


கோவை: கற்பகம் நிகா்நிலைப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் புல முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில் புல முதன்மையர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.

கோயம்புத்தூர் ஈச்சனாரியிலுள்ள கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தின் பொறியியல் புல முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவானது 11.09.2023-அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கற்பகம் உயர்கல்விக்கழக பொறியியல் புல முதன்மையர் முனைவர் ஏ.அமுதா வரவேற்புரை வழங்கினார்.



கற்பகம் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தாய்நாட்டின் பெருமை, தமிழின்சிறப்பு, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, மனஒருமைப்பாட்டின் மேன்மை மற்றும் போட்டித்தேர்வில் வெற்றிபெறும் அணுகுமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

இஸ்ரோ அமைப்பின் மேனாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.



அவர்தம் உரையில், ‘குறையாத ஆர்வம், தெளிவான திட்டமிடல், தளராத உழைப்பு, திடமான நம்பிக்கை, சமுதாயப் பொறுப்புணர்வு ஆகிய பண்புகள் மனிதனை முழுமையாக்குகின்றன.

அவர்களின் பொதுநல நோக்கத்தால் நாடு உயர்கிறது. சந்த்ராயன் முதலான திட்டங்களின் வெற்றிக்கு அவ்வாறு உழைப்பவர்களே காரணமாகின்றனர். அவ்வகையில் இளைஞர்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் உழைப்பதே நாட்டின் வளர்ச்சியாகும். அவ்வுயர் நோக்கத்திற்கு இளைஞர்கள் தம்மை உயர்த்திக் கொள்வதற்கு நாளும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை அன்றாட சுவாசம் போலவும், வெற்றியின் மீதான தேடல் அன்றாட வாழ்வியலாகவும் அமையவேண்டும்.

அதற்கு நல்ல நூல்களை நண்பனாகக் கொள்ளவேண்டும். கல்வியைத் தந்து வாழ்க்கையை உயர்த்த எண்ணுகிற பெற்றோர்களின் கனவுக்குத் தடையாகின்ற நடவடிக்கைகளுக்குத் தலைப்படாதவண்ணம் உள்ளம் பண்பட ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று வாழ்வை வளமாக்கிக்கொள்ளவேண்டும்’ என்று வாழ்த்தினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் முதன்மைச் செயல் அலுவலர் க. முருகையா விழாவில் முன்னிலை வகித்தார். கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சு.ரவி வாழ்த்துரையில், மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றிபெற வேண்டும்’ என்றார்.

கற்பகம் உயா்கல்விக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி மாணவர்களின் நலன் குறித்தும் கல்விசார் வேலைவாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். விழாவின் நிறைவாக பேராசிரியர் எம். தெய்வநாயகி நன்றியுரை வழங்கினார். விழாவில் தேர்வாணையர் முனைவர் ப. பழனிவேலு, மாணவர் நலன் முதன்மையா முனைவர் ப. தமிழரசி மற்றும் புல முதன்மையர்களும், பேராசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...