ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல்‌ கல்லூரியின்‌ முன்னாள்‌ மாணவர்‌ சங்கம்‌ துபாயில்‌ தொடக்கம்‌!

கோவை நவ இந்தியாவில்‌ இயங்கி வரும்‌ ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முன்னாள்‌ மாணவர்‌ சங்கம்‌ துபாயில்‌ நேற்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்‌.என்‌.ஆர்‌.சன்ஸ்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ லட்சுமி நாராயண சுவாமி பங்கேற்று சங்கத்தைத்‌ தொடங்கி வைத்தார்‌.



கோவை: ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முன்னாள்‌ மாணவர்‌ சங்கம்‌ துபாயில்‌ நேற்று தொடங்கப்பட்டது.

கோவை எஸ்‌.என்‌.ஆர்‌. சன்ஸ்‌ அறக்கட்டளையின்‌ கீழ்‌, கோவை நவ இந்தியாவில்‌ இயங்கி வரும்‌ ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முன்னாள்‌ மாணவர்‌ சங்கம்‌ துபாயில்‌ நேற்றைய தினம் (09.09.2023) தொடங்கப்பட்டது.



இதன்‌ பிரம்மாண்ட தொடக்க விழாவிற்கு, எஸ்‌.என்‌.ஆர்‌.சன்ஸ்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ லட்சுமி நாராயண சுவாமி தலைமை வகித்து சங்கத்தைத்‌ தொடங்கி வைத்தார்‌. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ மற்றும்‌ செயலர்‌ முனைவர்‌ பி.எல்‌.சிவக்குமார்‌ முன்னிலை வகித்தார்‌.

முன்னாள்‌ மாணவர்‌ சங்க துபாய்‌ கிளைத்‌ தலைவரும்‌, துபாய்‌ ஏ.இ.ஓ.என்‌. கமர்ஷியல்‌ புரோக்கர்ஸ்‌ நிறுவன தலைமை செயல்‌ அலுவலர்‌ மற்றும்‌ இணை நிறுவனருமான அனீஷ்‌ கோபாலன்‌ வரவேற்றார்‌.

இந்த நிகழ்வில் முன்னாள்‌ மாணவர்‌ சங்கத்தலைவர்‌ முனைவர்‌ ஆர்‌.பிரபு, முன்னாள்‌ மாணவர்‌ சங்க செயல்பாடுகள்‌ குறித்து விளக்கிப்‌ பேசினார்‌.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முன்னாள்‌ மாணவரும்‌, துபாயில்‌ பணியாற்றி வரும்‌ சமையல்‌ கலை நிபுணருமான ஆனந்த்‌ ராமகிருஷ்ணன்‌‌, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ உணவு மற்றும்‌ விடுதி மேலாண்மைத்துறை மாணவர்களுக்கு‌ பயிற்சி மற்றும்‌ வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்‌ கொடுக்க உதவிய, அவரது சேவையைப்‌ பாராட்டி, எஸ்‌.என்‌.ஆர்‌. சன்ஸ்‌ அறக்கட்டளையின்‌ நிர்வாக அறங்காவலர்‌ டி.லட்சுமிநாராயணசுவாமி‌ விருது வழங்கி சிறப்பித்தார்‌.

அதைத்தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸைச்‌ சார்ந்த 150 - க்கும்‌ மேற்பட்ட முன்னாள்‌ மாணவர்கள்‌ கலந்து கொண்டு தங்களது கல்லூரி அனுபவங்களையும்‌, நினைவுகளையும்‌ பகிர்ந்துக்‌ கொண்டனர்‌. மேலும்‌, துபாய்க்கு வரும்‌ மாணவர்களுக்கான பணி வாய்ப்புகள்‌ குறித்தும்‌ பேசினர்‌.

அதைத்தொடர்ந்து புதிதாக‌ தொடங்கப்பட்ட முன்னாள்‌ மாணவர்‌ சங்க துபாய்‌ கிளை சார்பில்‌, எஸ்‌.என்‌.ஆர்‌. சன்ஸ்‌ அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர்‌ உயர்‌ டி.லட்சுமி நாராயணசுவாமி அவர்களுக்கு நினைவுப்‌ பரிசு வழங்கப்பட்டது. முடிவில்‌ முன்னாள்‌ மாணவர்‌ சங்கச்‌ செயலர்‌ முனைவர்‌ ஜி.செந்தில்குமார்‌ நன்றி கூறினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...