ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் புதையல் வேட்டை நிகழ்ச்சி!

கோவையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு போட்டித் தேர்வுக்காக பயிற்சி பெறும் மாணவர்களுக்கான புதையல் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



கோவை: கோவை சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நடைபெற்ற புதையல் வேட்டை நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.



இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கான புதையல் வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது.



ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் தங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...