உடுமலையில் தனியார் பள்ளி ஆண்டு விழா - மாவட்ட ஆட்சியர் காணொலி வாயிலாக பங்கேற்பு!

உடுமலை அருகேயுள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும், கவிஞர் மங்கை மணிமாறன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.



திருப்பூர்: உடுமலை அருகேயுள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர் ஜி எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது வரவேற்புரை ஆர் ஜி.எம் குழுமம் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி வரவேற்புரை வாசித்தார். ஆண்டறிக்கையை பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி ஹரி பாபு வாசித்தார். விருந்தினர்களை ஆர் ஜி எம் குழுமம் செயலாளர் நந்தினி ரவீந்திரன் வரவேற்றார்.



மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் கலந்து கொள்ளாத நிலையில் காணொலி காட்சி மூலம் பள்ளி குழந்தைகளிடம் பேசினார். சிறப்பு விருந்தினராக கவிஞர் கங்கை மணிமாறன் கலந்து கொண்டு பேசியதாவது,



இன்றைய காலகட்டத்தில் தாய் தந்தையை மறந்து பலரும் பல தவறுகள் செய்து வருகின்றனர். ஆகையால் என்றென்றும் தாய் தந்தைகளை மறக்கக்கூடாது. அனைவரும் அப்துல் கலாம் ஆக வேண்டும் இது எண்ணத்தை நினைத்து உழைக்க வேண்டும்.

ஆயிரம் மொழிகள் கற்றுக் கொண்டாலும் நமது தமிழ் மொழியை மறக்காமல் கற்றுக் கொள்ள வேண்டும் இன்றைய நாகரீக உலகில் பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள நவீன தொலைபேசிகளை மாணவச் செல்வங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் மாவட்ட கல்வி அதிகாரி கீதா ஆர்.ஜி.எம் பள்ளியின் செயலாளர் கார்த்திகேயன் மதுரை கோட்டம் ரயில்வே குழு ஆலோசனை உறுப்பினர் சத்தியம் பாபு மற்றும் உடுமலை முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



இறுதியாக தேர்வுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட மாணவச் செல்வங்களுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டன.



பின்னர் ஆர்.ஜி.எம் பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் நடன நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...