கோவை கற்பகம்‌ நிகர்நிலைப்‌ பல்கலைக்கழகத்தின் 14 ஆவது பட்டமளிப்பு விழா - பட்டம் பெற்ற 2594-மாணவர்கள்‌

கோயம்புத்தூர்‌ கற்பகம்‌ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்‌ 14-ஆவது பட்டமளிப்பு விழாவானது, பல்கலைக்கழகத்தின்‌ வேந்தர்‌ முனைவர்‌ கு. இராமசாமி தலைமையில்‌ 30.08.2023, புதன்‌கிழமையன்று நடைபெற்றது. 2594-மாணவர்கள்‌ பட்டம்‌ பெற்ற இவ்விழாவில்‌ 40-மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும்‌, பல்வேறு துறைகள்‌ சார்ந்த ஆய்வாளர்கள்‌ 18-பேருக்கு முனைவர்‌ பட்டமும்‌ வழங்கப்பட்டது.


கோவை: ஒவ்வொரு தனிமனிதனின்‌ வளர்ச்சியும்‌ ஒட்டுமொத்த இந்தியாவின்‌ வளர்ச்சி என்கிற நோக்கில், இளைஞர்கள் அயராத உழைப்பால்‌ நாட்டை உயர்த்த வேண்டும்‌ என்று கோயம்புத்தூர்‌ கற்பகம்‌ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்‌ 14-ஆவது பட்டமளிப்புவிழாவில் புதுதில்லி சி.எஸ்‌.ஐ.ஆர்‌ அமைப்பின்‌ இயக்குநர் கலைச்செல்வி பேசினார்.

கோயம்புத்தூர்‌ கற்பகம்‌ நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின்‌ 14-ஆவது பட்டமளிப்புவிழாவானது, பல்கலைக்கழகத்தின்‌ வேந்தர்‌ முனைவர்‌ கு. இராமசாமி தலைமையில்‌ 30.08.2023, புதன்‌ கிழமையன்று நடைபெற்றது. விழாவிற்கு கற்பகம்‌ கல்விக்குழுமங்களின்‌ தலைவர்‌ டாக்டர்‌ இராச.வசந்தகுமார்‌ அவர்கள்‌ முன்னிலை வகித்தார்‌. தமயந்தி வசந்தகுமார்‌, முதன்மைச்செயல்‌ அலுவலர்‌ ௧. முருகையா, துணைவேந்தர்‌ டாக்டர்‌ ப.வெங்கடாசலபதி, பதிவாளர்‌ முனைவர்‌ சு.இரவி, தேர்வாணையர்‌ முனைவர்‌ ப.பழனிவேலு மற்றும்‌ முதன்மையர்கள்‌ உள்ளிட்டோர்‌ இவ்விழாவில்‌ கலந்துகொண்டனர்‌.



புதுதில்லி சி.எஸ்‌.ஐ.ஆர்‌ அமைப்பின்‌ இயக்குநரும்‌, டி.எஸ்‌.ஐ.ஆர்‌ அமைப்பின்‌ செயலாளருமாகிய முனைவர்‌ ந. கலைச்செல்வி பட்டமளிப்பு விழாவில்‌ முதன்மை விருந்தினராகக்‌ கலந்து கொண்டு மாணவர்களுக்குப்‌ பட்டங்களை வழங்கி, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்‌.



அவர்தம்‌ உரையில்‌, ஒவ்வொரு தனி மாணவனின்‌ கல்வியும்‌, சமுதாயத்தை ஈடேற்றவேண்டும்‌, இளைஞர்கள்‌, தாம்‌ பெற்ற கல்வியின்‌ பயனாக நாட்டின்‌ அமைதியை நிலைநிறுத்த வேண்டும்‌, கடல்‌ கடந்தும்‌, கண்டங்கள்‌ தாண்டியும்‌ வாழ்கின்ற வாய்ப்பைப்‌ பெற்றாலும்‌, நாம்‌ இந்தியாவின்‌ மரபுசார்‌ அறிவின்‌ அடையாளம்‌ என்பதை உலகுக்குச்‌ சொல்ல அயராது உழைக்க வேண்டும்‌, அத்தகைய உன்னத உழைப்பின்‌ அடையாளமாகவே சந்த்ராயன்‌ திட்டத்தின்‌ வெற்றியைக்‌ கொண்டாடுகிறோம்‌, அவ்வாறே எதிர்காலத்தில்‌ விளையவுள்ள அறிவியல்‌ புதுமைகளும்‌, தொழில்‌ துறை வளர்ச்சி வாய்ப்புகளும்‌ மக்களின்‌ அமைதி நிறைந்த நல்வாழ்வுக்கு உறுதுணை செய்ய இளைஞர்கள்‌ உறுதியேற்க வேண்டும்‌' என்றார்‌.



இந்தியா வல்லரசு என்பதை உலக அரங்கில்‌ பறைசாற்றுகிற பெரும்பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு. அதற்கான அறிவுத்திறனும்‌, ஆராய்ச்சிநுட்பமும்‌ இயல்பாகவே தமக்கு வாய்த்துள்ளது என்பதை ஒவ்வொரு இளைஞனும்‌ நம்பவேண்டும்‌. தாய்நாட்டின்‌ மீதான தனி அன்புடனும்‌, சமூகப்‌ பொறுப்புணர்வுடனும்‌ இளைஞர்கள்‌ நாட்டின்‌ ஆராய்ச்சி மற்றும்‌ தொழில்துறை வாய்ப்புகளைத்‌ தன்னார்வத்துடன்‌ கண்டடைய வேண்டும்‌. ஒவ்வொரு தனிமனிதனின்‌ வளர்ச்சியும்‌ ஒட்டுமொத்த இந்தியாவின்‌ வளர்ச்சி என்கிற நோக்கில்‌, அயராத உழைப்பால்‌ நாட்டை உயர்த்தவேண்டும்‌' என்று வலியுறுத்தினார்‌.



2594-மாணவர்கள்‌ பட்டம்‌ பெற்ற இவ்விழாவில்‌ 40-மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களும்‌, பல்வேறு துறைகள்‌ சார்ந்த ஆய்வாளர்கள்‌ 18-பேருக்கு முனைவர்‌ பட்டமும்‌ வழங்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...