ஓணம் பண்டிகையையொட்டி கோவை ஏ.ஜெ.கே கல்லூரி மாணவிகள் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகையையொட்டி கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜெ.கே கல்லூரியில் கேரளா பாரம்பரிய உடை அணிந்த மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு செண்டை மேளம் முழங்க நடனமாடி, ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.


கோவை: கோவை தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு மாணவ, மாணவிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

மலையாள மக்களால் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபலி அரசர் திருவோண நட்சத்திரத்தன்று மலையாள மக்களை காண வருவதையே ஓணம் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர்.



10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை மலையாள மொழி பேசும் மக்கள் அவரவர் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகாபலி அரசரை வரவேற்க தயாராகின்றனர்.



அப்போது சிறப்பு பூஜை செய்து பாரம்பரிய உடை அணிந்து கேரள பாரம்பரிய திருவாதிரை களி (நடனம்) ஆடி வரவேற்று மகிழ்கின்றனர்.



இப்பண்டிகையை உலகம் முழுவதிலும் இருக்கும் மலையாள மக்கள் கொண்டாடி வரும் நிலையில் கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜெ.கே கல்லூரியில் ஓணம் விழா கலைகட்டியுள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவை சேர்ந்த மாணவர்கள் இசை வாத்தியங்கள் மற்றும் செண்டை மேளம் முழங்க இரண்டு கிலோ மீட்டருக்கு மேலாக ஊர்வலமாக அணிவகுத்து வந்தனர்.



வாத்தியங்களின் இசைக்கு ஏற்ப மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



இதனையடுத்து பாரம்பரிய கேரள உடைய அணிந்து மாணவிகள் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் குத்தாட்டம் போட்டனர். இந்த ஊர்வலம் மீண்டும் கல்லூரியில் நிறைவடைந்தது.



இதனையொட்டி, அத்தப்பூ கோலமிட்டு கேரளா பாரம்பரிய உடை அணிந்த மாணவிகள் மகாபலி அரசரை வரவேற்று திருவாதிரை நடனமாடினர். செண்டை மேளம் முழங்க மகாபலி அரசரை வரவேற்க நடைபெற்ற திருவாதிரை களி காண்போரையும் நடனமாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...