உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், அறிவியல் பயிற்சி பட்டறை!

உடுமலை தேஜஸ் ரோட்டரி மற்றும் விருதுநகர் ரோட்டரி சங்கம், பள்ளி இன்டராக்ட் கிளப் ஆகியவை சார்பில் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகள் வாயிலாகவும், சிறிய சோதனைகளை செய்தும் அறிவியலாளர்கள் பயிற்சி அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி பட்டறையில் மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.



உடுமலை தேஜஸ் ரோட்டரி மற்றும் விருதுநகர் ரோட்டரி சங்கம், பள்ளி இன்டராக்ட் கிளப் ஆகியவை இணைந்து உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பயிற்சி பட்டறையை நடத்தியது.

பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். உடுமலை தேஜஸ் ரோட்டரி தலைவர் லோகேஸ்வரி, பட்டய தலைவர் சக்ரபாணி முன்னிலை வகித்தனர்.



இதில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகள் வாயிலாகவும், சிறிய சோதனைகளை செய்தும் அறிவியலாளர்கள் நவீன்குமார், சதீஸ்குமார் மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி அளித்தனர்.



மருத்துவர்கள் ராஜபாலன், கணேஷ், சுந்தரராஜன் பங்கேற்று, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி ரோட்டரி இன்டராக்ட் கிளப் பொறுப்பாசிரியர் லட்சுமணதாஸ் நன்றி தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...