கோவை கற்பகம் பல்கலையில் கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி - 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடனுக்காக விண்ணப்பித்தனர்.


கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்றைய தினம் ஈச்சனாரியில் உள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் மாபெரும் கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் சூலூர் பகுதிகளில் இருந்து 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.



அனைத்து மாணவர்களின் விண்ணப்பங்களையும் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, வங்கி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. விரைவில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் நிதியுதிவி பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியிர் கிராந்திகுமார், கற்பகம் கல்வி குழுமங்களின் தலைவர் வசந்தகுமார், வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, வங்கி அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...