தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ உலகத்‌ தரம்‌ வாய்ந்தது என அமெரிக்க பேராசிரியர் புகழாரம்

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சர்வதேச கெளரவப்‌ பேராசிரியர்‌ திட்டத்தின்‌ தொடக்கவிழாவில் அமெரிக்க பேராசிரியர்கள் ‌மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர். அமெரிக்காவின்‌ என்‌.டி.எஸ்.யு (NDSU), தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ கூட்டுறவை உருவாக்க ஆர்வமாக உள்ளதாக பேராசிரியர் எஸ்.செந்தில் தெரிவித்தார்.


கோவை:‌ ஐடிபிதிட்டத்திற்கு உலக வங்கி மற்றும்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்கழகம்‌ ஆகியவை மாநில வேளாண்‌ பல்கலைக்கழகங்களுக்கு திறன்‌ மேம்பாட்டிற்காக நிதியுதவி செய்வதாகவும், இந்தயிற்சிக்காக 50 இளங்கலை மாணவர்களை அமெரிக்கா, கனடா மற்‌றும்‌ நெதர்லாந்தில்‌ உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ரூ.25 கோடி ஒப்பளிக்கப்பட்‌டுள்ளதாவும் தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலெட்சுமி தெரிவித்தார்.



ICAR-NAHEP நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (IDP) நிதியுதவியுடன்‌ கோயம்புத்தூர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சர்வதேச கெளரவப்‌ பேராசிரியர்‌ திட்டத்தின்‌ தொடக்கவிழா ஆகஸ்ட்‌ 14, 2023 அன்று தாவர மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்பவியல்‌ மையத்தில்‌ ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்காவின்‌ தெற்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியரும்‌ இணை முதன்மையருமான முனைவர்‌ செந்தில்‌ சுப்பிரமணியன்‌ ஆகஸ்ட்‌ 14 முதல்‌ செப்டம்பர்‌ 1, 2023 வரை கோயம்புத்தூர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள சி.பி.எம்‌.பி&பி.யில்‌ வகுப்புகளைக்‌ கையாளுகிறார்‌.

மாணவர்களின்‌ உலகளாவிய புரிதல்‌ வளர்ப்பதற்காக சர்வதேச அளவில்‌ பாராட்டப்பட்ட பேராசிரியரால்‌ இளங்கலை மாணவர்களுக்கு வழிகாட்‌டுவதை இந்த நிகழ்ச்சித்‌ திட்டம்‌ நோக்கமாகக்‌ கொண்டுள்ளது. B.Tech (பயோடெக்‌) 2 மற்றும்‌ 3-ம் ‌ஆண்டு இளங்கலை மாணவர்கள்‌ 97 பேர்‌ இதில்‌ பங்கேற்கின்றனர்‌ . தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலெட்சுமி தொடக்க விழாவில்‌ பேசுகையில்‌, இந்த ஐடிபிதிட்டம்‌ உலகம்‌ முழுவதிலுமிருந்து அறிவைப்‌ பெறும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு உலக வங்கி மற்றும்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்கழகம்‌ ஆகியவை மாநில வேளாண்‌ பல்கலைக்கழகங்களுக்கு திறன்‌ மேம்பாட்டிற்காக நிதியுதவி செய்கின்றன.

இப்பயிற்சிக்காக 50 இளங்கலை மாணவர்களை அமெரிக்கா, கனடா மற்‌றும்‌ நெதர்லாந்தில்‌ உள்ள சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு அனுப்ப ரூ.25 கோடி ஒப்பளிக்கப்பட்‌டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தால்‌ செயல்படுத்தப்பட்‌டு வரும்‌ இத்திட்டத்தின்‌ வெற்றியைப்‌ பாராட்டி, தமிழக அரசும்‌ கூடுதலாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த நிதியை பயன்படுத்தி அமெரிக்கா, ஜப்பான்‌, ஐரோப்பா ஆகிய நாடுகளைச்‌ சேர்ந்த கூடுதல்‌ பேராசிரியர்கள்‌ அடுத்த மாதம்‌ தமிழ்நாடு வேவேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ கற்பிக்க உள்ளனர்‌. நேரடி பயிற்சி அனுபவத்திற்கு அதிக நேரம்‌ ஒதுக்கவும்‌, சுதந்திரமாக இருக்கவும்‌ மாணவர்களுக்கு துணைவேந்தர்‌ அறிவுறுத்தினார்‌. மாணவர்கள்‌ தற்சார்புடன்‌ தொழில்‌ முனைவோராக மாற நிறைய வாய்ப்புகள்‌ உள்ளன. உதாரணமாக, 45 கிலோயூரியா மூட்டையின்‌ உற்பத்தி செலவு ரூ.2200.

ஆனால்‌ அரசு மானிய விலையில்‌ ரூ.242-க்கு விவசாயிகளுக்கு வழங்குகிறது. எனவே, நானோ யூரியா மற்றும்‌ நானோ அடிப்படையிலான பொருட்களை உருவாக்க நிறைய வாய்ப்புகள்‌ உள்ளன. அமெரிக்கப்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ எஸ்‌.செந்தில்‌ தனது உரையில்‌, தான்படித்த கல்லூரிக்கு இது ஒரு கைமாறு செய்யும்‌ தருணம்‌ என்றார்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சிறந்த உலகத்‌ தரம்‌ வாய்ந்த பல்கலைக்கழகங்களில்‌ ஒன்றாகும்‌. அமெரிக்காவின்‌ என்‌ .டி.எஸ்.யு (NDSU), தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்துடன்‌ கூட்டுறவை உருவாக்க ஆர்வமாக உள்ளது.

பயிர்சார்ந்த நுண்ணுயிர்‌ தயாரிப்புகளுக்கு 13 பில்லியன்‌ அடுமரிக்க டாலர்‌ சந்தை இருப்பதாக அவர்‌ பரிந்துரைத்தார்‌. மேலும்‌ மாணவர்கள்‌ ஆர்வமுள்ள மனதைக்கொண்டிருக்க ஊக்குவித்தார்‌. இயக்குனர்‌ (CPMB&B) மற்றும்‌ முதன்மையர்‌ (SPGS) முனைவர்‌ ந.செந்தில்‌ பங்கேற்பாளர்களை வரவேற்றார்‌.

வேளாண்மை முதன்‌ மையர்‌ முனைவர்‌ நா.வெங்கடேசபழனிசாமி, இயக்குநர்‌ (வணிக வேளாண்மை) முனைவர்‌ ஏ.சோமசுந்தரம்‌ ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கினர்‌. தாவர உயிரி தொழில்நுட்‌பத்துறை பேராசிரியரும்‌, தலைவருமான முனைவர்‌ இ.கோகிலாதேவி நன்றி கூறினார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...