துணைவேந்தருக்கு மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை - சுதந்திர தின விழாவில் ஏற்பாடு

கோவையில் கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் சார்பில் நாட்டின் 77ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முதன்மையர்களும், துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கோவை: அரும்பாடுபட்டு நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்பது அனைவரின் கடமை என கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் துணைவேந்தர் வெங்கடாசலபதி தெரிவித்தார்.

நாட்டின் 77-ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடுகிற வகையில், கற்பகம் உயர்கல்விக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி அவர்கள் தேசிய கொடியை ஏற்றிச் சிறப்புரையாற்றினார். கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் க.முருகையா அவர்களும், பதிவாளர் முனைவர் சு.ரவி அவர்களும் விழாவில் முன்னிலை வகித்தனர்.

தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்களின் சுதந்திர தின விழா சிறப்பு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுச் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் அவர்கள் தமது உரையில், அரும்பாடுபட்டு நமது முன்னோர்கள் பெற்றுத்தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்பது அனைவரின் கடமை.

அதற்கு ஒவ்வொருவரும் தன்னலத்தை மறந்து, பொதுநலத்துடன் வாழ வேண்டும். நாட்டில் அத்தகைய அமைதிமிக்க சூழலை நிலைநாட்ட மாணவர்கள் உறுதியேற்க வேண்டும்; அறிவியல், தகவல் தொழில்நுட்பம் முதலான பல துறை வளர்ச்சியையும் தமது கல்வியுடன் ஒருங்கிணைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு உரம் சேர்க்க வேண்டும்.

அத்தகைய சமுதாயப் பொறுப்புணர்வே சுதந்திரப்போராட்டத் தியாகிகளுக்கு நாம்‌ செலுத்துகிற நன்றியாக அமையும். இளைஞர்கள் இந்தியாவின் மரபுசார் பண்பாட்டுச் சிறப்பை உலகறியச் செய்வதற்கு முனைப்புடன் உழைக்க சுதந்திர தின நன்னாளில் உறுதியேற்க வேண்டும் என்றார்.



விழாவில் முதன்மையர்களும், துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...