கோவை வேளாண்‌ பல்கலையில்‌ போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நாள்‌ விழா!

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள்‌ எதிர்ப்பு தின விழா நடைபெற்றது. இதில் ஆர்‌.எஸ்‌.புரம்‌ காவல்துறை துணை ஆணையர்கள் முன்னிலையில் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள்‌ எதிர்ப்பு தின விழாவையொட்டி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சரின்‌ உத்தரவுப்படி கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில்‌ (Golden Jubilee Lecture Hall) போதைப்பொருள்‌ எதிர்ப்பு தின உறுதிமொழி நடைபெற்றது.

இந்த காவல்துறை துணை ஆணையர்‌ சு.ரவிக்குமார்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ (மேற்கு), சுகுமாரன்‌, காவல்துறை உதவி ஆய்வாளர்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ (மேற்கு) மற்றும்‌ லதா, காவல்‌ துறை உதவி ஆய்வாளர்‌, ஆர்‌.எஸ்‌.புரம்‌ (மேற்கு) ஆகியோர் முன்னிலையில்‌ இந்த நிகழ்வு நடைபெற்றது.

காவல்துறை துணை ஆணையர்‌ அவருடைய உரையில்‌ போதைப்‌ பழக்கத்தால்‌ ஏற்படும்‌ தீயவிளைவுகள்‌ அவற்றால்‌ சமுதாயத்திலும்‌, குடும்பத்திலும்‌ ஏற்படும்‌ பாதிப்புகள்‌ ஆகியவற்றை பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்‌.

உறுதிமொழி எடுக்கும்‌ நிகழ்ச்சியில்‌ முனைவர்‌. ந.வெங்கடேச பழனிச்சாமி, முதன்மையர்‌ (வேளாண்மை), பேராசிரியர்கள்‌, உதவி பேராசிரியர்கள்‌ மற்றும்‌ 500க்கும்‌ மேற்பட்ட இளநிலை, முதுகலை மற்றும்‌ முனைவர்‌ பட்டம்‌ பயிலும்‌ மாணவ, மாணவியர்கள்‌ போதைப்‌ பொருள்‌ எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்‌.

மேலும்‌, வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில்‌ மாணவ, மாணவியர்கள்‌ கையில் பதாகைகளுடன்‌ விழிப்புணர்வு பேரணியும்‌ நடத்தினர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...