பிளாஸ்டிக் பாட்டில் நிறுவனத்தில் பூலாங்கிணறு அரசு பள்ளி மாணவர்கள் களப்பயணம்!

உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள், அதே பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தில் களப்பயணம் மேற்கொண்ட நிலையில், பல்வேறு விதமான பாட்டில்கள் தயாரிப்பது குறித்து கேட்டறிந்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த பூலாங்கிணறு அரசு பள்ளி மாணவர்கள் பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தில் களப்பணியில் ஈடுபட்டனர்.

உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அருகாமையில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் களப்பயணம் மேற்கொண்டனர்.



பள்ளி தலைமை ஆசிரியரின் வழிகாட்டலின் படி தொழிற்கல்வி ஆசிரியர் கே செந்தில்குமார் பொருளியல் ஆசிரியை தேவிகா நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செ சரவணன் ஆகியோர் மாணவ மாணவிகளை அழைத்துச் சென்றனர்.



முப்பது மாணவ மாணவிகள் இக் களப்பயணத்தில் கலந்து கொண்டனர். இதில், 300 மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் பாட்டில்கள் தயார் செய்யும் முறைகள் பற்றி மாணவ மாணவிகள் கேட்டு அறிந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...