கோவை ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1994-98ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்த முன்னாள் மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியில் பயின்று வரும் 7 மாணவர்களின் கல்வி உதவித் தொகையை பள்ளி முதல்வரிடம் வழங்கினர்.


கோவை: கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

கோவைப்புதூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1994-98ம் ஆண்டில் என்ஜினீயரிங் படித்த முன்னாள் மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்த முன்னாள் மாணவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த குழுவில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணிபுரியும் நபர்களும் உள்ளனர்.

பிரார்த்தனை பாடலுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி.பிரதாப் வரவேற்றார். ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எம்.ஜி.சுமித்ரா வாழ்த்துரை வழங்கினார், மூத்த ஆசிரியர்கள் டாக்டர் எஸ். பழனியம்மாள், திரு.கந்தசாமி மற்றும் முன்னாள் மாணவர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திரு.எஸ்.பி.சிவக்குமார், திரு.எஸ்.எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் சார்பில் 7 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை கல்லூரி முதல்வரிடம் வழங்கினர்.

இந்நிலையில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்களின் 25ம் ஆண்டு நினைவாக கல்லூரி வளாகத்தில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன.

கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.சிவக்குமார், எஸ்.எம்.பழனியப்பன், பாலாஜி, கீதா, மாலதி சுதர்சன் உள்ளிட்டோர் மற்ற ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்பாளர் பி. அனந்த பிரபா நன்றியுரையுடன் அமர்வு நிறைவு பெற்றது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...