இடிகரை உயர்நிலை பள்ளியில் முப்பெரும் விழா - கலை நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் நடனமாடி அசத்தல்!

கோவை அடுத்த இடிகரை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் அப்பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியைகள் நடனமாடி அசத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை: இடிகரை அரசு உயர்நிலை பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியைகள் நடனமாடி அசத்தினர்.

கோவை இடிகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், பள்ளி ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.



காலை தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

அவிநாசி அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் தமிழ்ச்செம்மல், முனைவர் மணிவண்ணன் தலைமையில் மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து மதியம் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இணைந்து சமபந்தி போஜனம் வழங்கினர்.

தொடர்ந்து மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் சித்ரா அனைவரையும் வரவேற்றார். சித்தாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் சங்க தலைவர் நிர்மலா முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு அரசு, பள்ளிகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுதாய நலப்பணிகளின் ஒரு பகுதியாக இப்பள்ளியை தத்தெடுத்து பள்ளியின் மேம்பாட்டுப் பணிகளை செய்து வரும் சி.ஆர்.ஐ.பம்ஸ் நிறுவனத்தின் எச்.ஆர். அண்ணாத்துரை மற்றும் கோவை மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் இளமுருகன் ஆகியோர் தலைமை உரையாற்றினர்.



சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட அசோகபுரம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, வெள்ளக்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, சி.ஆர்.ஐ.பம்ஸ் நிறுவன சி.எஸ்.ஆர். தலைவர் ராஜா, நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், அசோகபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, வட்டமலைபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வனிதாகுமார், இடிகரை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செண்பகம், அத்திபாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் 100 சதவிகித தேர்ச்சி வழங்கிய ஆசியர்கள் மற்றும் பள்ளியின் அதிக தேர்ச்சிக்காக பணியாற்றிய ஆசிரியர்களும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



தொடர்ந்து விரைவில் ஓய்வுபெறவுள்ள பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா மற்றும் ஓய்வுபெறவுள்ள கணித ஆசிரியர் எலிசபெத் இன்பராணி ஆகியோர் பள்ளி ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவித்தனர்.



அதேபோல் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதில் ஒரு பாடலுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா பங்கேற்று மாணவர்களுடன் நடனம் ஆடினார். மற்றொரு பரதநாட்டியத்தில் பள்ளி ஆசிரியைகள் இருவர் நடனமாடி மாணவிகளுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என அசத்தினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...