கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி - கருமத்தம்பட்டி சரக டி.எஸ்.பி பங்கேற்பு!

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கருமத்தம்பட்டி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி கலந்துகொண்டு, மாணவர்களிடம் சைபர் குற்றங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து கலந்துரையாடினார்.


கோவை: கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி கருமத்தம்பட்டி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியின் போதைப்பொருள் எதிர்ப்புக் குழு சார்பில் கடந்த ஜூலை 14ஆம் தேதி போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்வில் பல்வேறு பொறியியல் பிரிவுகளில் இருந்து, முதலாம் ஆண்டு மாணவர்கள் மொத்தம் 150 பேர் பங்கேற்றனர்.

தொடக்க விழா மதியம் 02.30 மணியளவில் மகாத்மா காந்தி அரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நடைபெற்றது. போதை பொருள் ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜா.கணேஷ் முரளி அனைவரையும் வரவேற்று, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்கான காரணத்தை தெரிவித்தார்.

கற்பகம் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் வெ.குமார் சின்னையன் போதைப்பொருளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மாணவர்கள் தங்களின் நேரத்தை பயனுள்ள வகையில் ஈடுபட வளாகத்தில் உள்ள பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கினார்.

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கோவை கருமத்தம்பட்டி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி தலைமை வகித்தார்.



அவர் தனது உரையில் பல்வேறு சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் அவற்றிலிருந்து மாணவர்கள் தங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

பாலியல் துன்புறுத்தல் விளைவுகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் பாதுகாப்பது மற்றும் மீள்வதற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்களையும் தெரிவித்தார். மேலும், சைபர் கிரைம், போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...