கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலையில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கு துளிர் நிகழ்வு!

கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்-2023' விழாவானது ஜீலை 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.


கோவை: கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்-2023' நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.

கோவை கற்பகம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்-2023' விழாவானது ஜீலை 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்வில் கற்பகம் உயர்கல்வி கழக கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ.பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமத்தின் தலைவர் டாக்டர் இராச. வசந்தகுமார் தாய்நாட்டின் பெருமை, தமிழின் சிறப்பு, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, மன ஒருமைப்பாட்டின் மேன்மை மற்றும் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் அணுகுமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.



பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவஹர், தமது உரையில் நவீனத் தொழில்நுட்பம் மிக்க நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குவதாகவும், இந்தியாவின் வளர்ச்சி மாணவா்களின் அயராத உழைப்பில் இருப்பதாகவும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்க வேண்டும் என்றும், திருக்குறளை வாழ்வியல் நூலாக கொள்ள வேண்டும் என்றும் சிறப்புரை வழங்கினார்.



2ம் நாள் (6.07.2023) நிகழ்வில் பட்டிமன்றப் பேச்சாளர் பேரா. எம். இராமச்சந்திரன் மாணவர்கள் தங்களது குறிக்கோளை திட்டமிட்டு காலத்தை முறையாக பயன்படுத்தி கொண்டு, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி என்று அறிவுறுத்தினார்.



கற்பகம் உயர்கல்விக் கழகத்தின் பதிவாளர் முனைவர் சு.ரவி வாழ்த்துரையில் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

கற்பகம் உயா்கல்விக் கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி மாணவர்களின் நலன் குறித்தும் கல்விசார் வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையா் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...