கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம் - பூக்கள் கொடுத்து சீனியர் மாணவர்கள் வரவேற்பு!

கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் இன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கிய நிலையில், முதல் நாள் கல்லூரிக்கு வந்த மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜா பூ, சந்தனம் கொடுத்து, பன்னீர் தெளித்தும் வரவேற்பு அளித்தனர்.



கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியதை தொடர்ந்து, சீனியர் மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் அரசு கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்குகின்றன. அதன் படி கோவையிலும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர் அரசு கலை கல்லூரி, புலியகுளம் அரசு கலை கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டது.



இந்நிலையில் கல்லூரிக்கு முதல் நாள் வருகை புரிந்த மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜா பூ, சந்தனம் கொடுத்தும், பன்னீர் தெளித்தும் வரவேற்பு அளித்தனர்.

இக்கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டில் 1,626 இடங்களில் 1,494 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் மீதமுள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இன்று முதல் 7ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...