கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ‘ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ்’ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடக்கம்!

கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி திறந்து வைத்தார்.


கோவை: துடியலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியில் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.



துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரி ஸ்பார்க் இன்குபேஷன் மையத்தில் ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எஸ்.என்.ஆர் சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் டி. லட்சுமி நாராயணசுவாமி திறந்து வைத்தார்.



இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு விளக்கும் போது தற்கால தொழில் நிறுவங்களின் தேவைகள், நிபுணத்துவம் மற்றும் திறன் ஆகியவை ஒரு பார்வையுடன் உற்பத்தியை செயல்படுத்தி சிறந்த தீர்வை உருவாக்கும் நோக்கில் எனேபிளிங் மேனுபேக்ட்ரிங் வித் எ விஷன் எனும் மோட்டோவை கொண்டு தொடங்கப்பட்டுள்ளது.



புதிதாக அமைந்திருக்கும் இயந்திரத்தை பற்றி குறிப்பிடும் போது பல்வேறு கருவிகளின் பாகங்களை முன்கூட்டியே பயிற்சி அளிக்கப்பட்ட மாதிரிகளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு பல்வேறு விதமான கோணங்களில் ஆய்வு செய்து, விடுபட்ட அம்சங்களை கண்டறிந்து அவற்றை சுட்டிக்காட்டும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இயந்திர தயாரிப்பு, தரத்தை மேம்படுத்தும் பல நம்பகமான மற்றும் செலவு குறைந்த தீர்வை வழங்கும் தொழில்துறை ஆய்வுகளை மேற்கொள்ளும் விதத்தில் உருவாக்க பெற்றிருப்பது முக்கிய அம்சமாகும்.



கல்லூரியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் தொழில்நுட்ப துறையை சார்ந்த பேராசிரியர் ரஞ்சித் குமார், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையை சார்ந்த கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்களான சந்தோஷ், அருண் மற்றும் முன்னாள் மாணவர் கரண் முயற்சியில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளதை நிர்வாக அறங்காவலர் பாராட்டினார்.

இந்த விழாவிற்கு கல்லூரியின் தொழில்துறை தலைவர் கணேஷ், ஆர்டிஸ்பெக் டெக்னாலஜிஸ் இயக்குநர் வனிதா, துணை முதல்வர் முனைவர் கருப்பசாமி, பல்வேறு துறைத் தலைவர்கள், அட்நா ஆட்டோமேஷன், சக்தி ஆட்டோ அன்சில்லரி, எல்.அண்ட். டி டிபென்ஸ் நிறுவனக்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...