திருப்பூரில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் போட்டிகள் - மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

பல்லடத்திலுள்ள எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 180க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.



திருப்பூர்: பல்லடத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் நடைபெற்று வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்காக நடைபெற்ற பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் கவிதை போட்டிகளில் 180க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுவதோடு மாநில அளவிலான போட்டிக்கும் தகுதி உடையவர்களாக தேர்ந்தெடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...