மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்ட கோவை வேளாண் பல்கலை!

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த திவ்யா முதலிடமும், உசிலம்பட்டியை சேர்ந்த ஸ்ரீ ராம் 2ஆம் இடமும், மாணவி முத்துலட்சுமி 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.



கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் இளமறிவியல் பட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



இன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதே போல நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் தரவரிசை பட்டியல் அங்கு தனியாக வெளியிடப்படுகிறது.

இந்திய அளவில் வேளாண் சார்ந்த படிப்புகளில் பெண் பிள்ளைகள் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். தமிழகத்தில் கூடுதலாக 70:30 என்ற அடிப்படையில் இந்த ஆர்வம் உள்ளது. வேளாண் படிப்புகளுக்கு மாணவர் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதுடன், இந்தாண்டு தரமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் விண்ணப்பித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தை மாணவி திவ்யா முதலிடமும், உசிலம்பட்டியை சேர்ந்த மாணவர் ஸ்ரீ ராம் இரண்டாம் இடமும், சங்கரன்கோவில் மாணவி முத்துலட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஜூன் மாதம் 3 வது வாரத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூலை கடைசி வாரத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்படும். கடந்தாண்டை விட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆண்டு அதிகமாக விண்ணப்பித்து உள்ளது.

குறிப்பாக, தமிழ் வழியில் இளமறிவியல் வேளாண், இளமறிவியல் தோட்ட கலைத்துறை ஆகிய இரு படிப்புகளுக்கு தலா 50 இடங்கள் என 100 இடங்களுக்கு 9,997 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலந்தாய்வு முழுவதும் ஆன் லைன் மூலம் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்க மட்டும் நேரில் வர வேண்டும்.

மாணவர்களுக்கு ஆன்லைனில் 54 வாய்ப்புகள் விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும். தரவரிசை பட்டியலில் இடம்பெறும் மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்துவிட்டால், அவர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள தகுதியான மாணவர் தாமாகவே மேல் வரும் வகையில் ஆன்லைனில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதுடன், மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு என்பதற்கு வாய்ப்பில்லை.

பல்கலைகழக பட்டமளிப்பு விழா இந்தாண்டு மட்டும் இரண்டு மாதம் தள்ளி போயிருக்கிறது. கவர்னர் அலுவலகத்தில் இருந்து பட்டமளிப்பு விழாவிற்கு ஜூலை மாதம் தேதி கொடுப்பதாக சொல்லி இருக்கின்றனர். மாணவர்களுக்கு அவசரமாக சான்றிதழ் தேவைப்படும் நிலையில், சான்றிதழ் கொடுக்க சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

துணைவேந்தர் மாநாடு தொடர்பாக அரசு தரப்பில் இருந்தோ, கவர்னர் அலுவலகத்தில் இருந்தோ எந்த அழுத்தமும் தரப்படவில்லை. தமிழ்வழியை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக கவர்னர், துணை வேந்தர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

இதில் அனுவாதினி என்ற மென்பொருள் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும், பிற மொழிகளை 85 சதவீதம் வரை அந்த மென்பொருள் செயலி மூலம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்து கொள்வது குறித்த பயிற்சியும் துணைவேந்தர்களுக்கு மாநாட்டில் பயிற்சி கொடுக்கபட்டது. 2,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழாவிற்காக காத்திருக்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...