கோவை வேளாண் பல்கலை, நாகை மீன்வளப் பல்கலையில் ஜூன் கடைசி வாரத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவடைந்து வரும் ஜூன் இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக அறிவிப்பு. மேலும், இணையவழி கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் எனவும் அறிவிப்பு.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூன் இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



2023-2024 ஆம்‌ கல்வியாண்டு முதல் கோயமுத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ நாகப்பட்டினம்‌ தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா மீன்வளப்‌ பல்கலைக்கழகம்‌, ஆகிய பல்கலைக்கழகங்கள்‌ இணைந்து பொதுவான இணையதள விண்ணப்பம்‌ மூலம்‌ இளமறிவியல்‌ பட்டப்படிப்பில்‌ சேர தகுதியான மாணவர்களிடம்‌ இருந்து விண்ணப்பங்களை வரவேற்றன. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ ஒருங்கிணைப்பு முகவராக செயல்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்‌ மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ 14 இளமறிவியல்‌ பாடப்பிரிவுகளுக்கும்‌, 3 பட்டய படிப்புகளுக்கும்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌. தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா மீன்வளப்‌ பல்கலைகழகத்தில்‌ 6 இளமறிவியல்‌ பாடப்பிரிவுகளுக்கும்‌ மற்றும்‌ மூன்று தொழில்முறை பாடப்பிரிவுகளுக்கும்‌ மாணவர்‌ சேர்க்கை நடைபெறும்‌.

இந்த கல்வியாண்டில்‌ 5,361 இடங்களை (உறுப்புக்‌ கல்லூரிகளுக்கு -2555 - இணைப்பு கல்லூரிகளுக்கு - 2806) நிரப்புவதற்கு தகுதியான விண்ணப்பங்கள்‌ இணையதள வாயிலாக 10.05.2023 முதல்‌ 09.06.2023 வரை பெறப்பட்டு வந்தன.

இளமறிவியல்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு மொத்தம்‌ 41,434 பேர்‌ விண்ணப்பித்து உள்ளனர்‌. அவர்களுள்‌ 36,612 பேர்‌ தரவரிசைக்கு தகுதியானவர்களாக கருதப்பட்டனர்‌. அவர்களுள்‌ பெண்‌ விண்ணப்பித்தாரர்களின்‌ எண்ணிக்கை (21,384), ஆண்‌ விண்ணப்பித்தாரர்களின்‌ எண்ணிக்கை (12,333). ஆண்‌ பெண்‌ விகிதம்‌ 580 : 1000.

அரசு பள்ளியில்‌ பயின்ற மாணவர்களுக்கான (7.5%) இடஒதுக்கீட்டில்‌ 10,887 மாணவர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. ஆறாம்‌ வகுப்பு முதல்‌ பனிரெண்டாம்‌ வகுப்பு வரை அரசாங்க பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்களின்‌ EMIS எண்கள்‌ தமிழ்நாடு அரசாங்கத்தின்‌ சரிபார்ப்புக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த கல்வியாண்டில்‌ இந்த இடஒதுக்கீட்டின்‌ கீழ்‌ 403 மாணவர்கள்‌ சேர்க்கப்படுவார்கள்‌. இந்த மாணவர்களின்‌ கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்‌.

தமிழ் வழியில்‌ இளமறிவியல்‌ (மேதமை) வேளாண்மை (50 இடங்கள்‌) மற்றும்‌ இளமறிவியல்‌ (மேதமை) தோட்டக்கலை (50 இடங்கள்‌) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகள்‌ பயிற்றுவிக்கப்படுகின்றன. தமிழ்வழியில்‌ பயில 9997 மாணவர்கள்‌ விண்ணப்பித்துள்ளனர்‌.

முன்னாள்‌ இராணுவ வீரர்களின்‌ இடஒதுக்கீட்டில்‌ 20 இடங்களுக்கு 309 பேர்‌ விண்ணப்பித்துள்ளனர்‌. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மொத்தம்‌ 5% இடங்கள்‌ ஒதுக்கப்பட்டு இந்த கல்வியாண்டில்‌ 128 மாணவர்கள்‌ சேர்க்கப்படுவார்கள்‌.

மேலும்‌, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில்‌ 790 விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு அவர்களில்‌ 20 மாணவர்கள்‌ சேசர்க்கப்படுவார்கள்‌. தொழில்முறைக்‌ கல்வி பயின்ற மாணவர்களுக்கு 5% இடங்கள்‌ ஒதுக்கப்பட்டு 242 மாணவர்கள்‌ சேர்க்கப்படுவார்கள்‌.

முன்னாள்‌ இராணுவ வீரர்‌, மாற்று திறனாளிகள்‌ மற்றும்‌ சிறந்த விளையாட்டு வீரர்கள்‌ போன்ற சிறப்பு இடஒதுக்கீடுகளுக்கு சான்றிதழ்‌ சரிபார்ப்பு ஜூன்‌ 2023 மூன்றாவது வாரத்தில்‌ இருந்து தொடங்கப்படும்‌.

தகுதியானவர்கள்‌ ஜூன்‌ கடைசி வாரத்தி ல்‌ கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்‌. இணையவழி கலந்தாய்வு மற்றும்‌ பொது இடஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்‌ சரிபார்ப்பு ஜூலை 2023 முதல்‌ வாரத்திலிருந்து தொடங்கும்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...