பார்க் பொறியியல் கல்லூரியில் 2-வது நாள் கலைத் திருவிழா - மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்பு

கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ZERO-G விழா 2-வது நாளாக நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, நடத்தப்பட்ட 30 வகையான போட்டிகளில் 22 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


கோவை: கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் இரண்டு நாள் கலை திருவிழாவான, ஆண்டு விழா 2023- ZERO G வெகு விமர்சையாக நடைபெற்றது.



இந்த கலை விழாவையொட்டி, நடத்தப்பட்ட போட்டிகளில் 22 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். பீட்ப்ளீட்ஸ், கோரஸ் பேட்டில், ஷார்ட்ஜில்லா, ஸ்னாபோக்ராபி, வெர்பாசிட்டி போன்ற 30க்கும் மேலான போட்டிகள் நடைபெற்றன.



பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர். அனுஷா ரவி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, இந்த மாலை வேளை மாணவர்கள் உங்களுக்கானது ஆகவே கொண்டாடி மகிழுங்கள் என்று வாழ்த்தினார்.



விழாவில், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற திரையுலக பின்னணி பாடகர்கள் வ்ருஷா, நிவாஸ் மற்றும் ஸ்ரீநிஷா தங்கள் பாடல் திறமையால் மாணவர்களை மகிழ்வித்தார்கள்.



விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், பார்க் கல்வி குழுமத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், மாணவர்கள் கொடுத்த வரவேற்பு மிகவும் அருமை என்றும் தெரிவித்தனர். பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர். ரவி, விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப்பரிசு வழங்கியும் வரவேற்றார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...