கோவை ரத்தினம்‌ கலை, அறிவியல் கல்லூரியில் நாளை (மே.12) 'ரத்தினம்‌ விழா 2023'!

கோவையில் உள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி விழாவான 'ரத்தினம்‌ விழா 2023' நிகழ்வானது நாளைய தினம் நடைபெறவுள்ளதாகவும், இதில் சின்னத்திரை தொகுப்பாளர் மா.கா.பா ஆனந்த் பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் உள்ள ரத்தினம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நாளைய தினம் (மே.12) ‘ரத்தினம்‌ விழா 2023’ நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

ரத்தினம்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ “ரத்தினம்‌ விழா 2023” என்ற தலைப்பில் கல்லூரி தின விழா நடைபெறவுள்ளது. இந்த கல்லூரி விழாவானது நாளை(12.05.2023) காலை 9:30 மணி அளவில்‌ கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில்‌ பல்வேறு தொழில்நுட்ப மற்றும்‌ கலாச்சார நிகழ்வுகளில்‌ மாணவ, மாணவிகள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

உதாரணமாக, தமிழ்‌ & ஆங்கிலம்‌ கட்டுரை, கவிதை. பேச்சு போட்டி, வினாடி வினா, ஒவியம்‌, அடுப்பில்லா சமையல்‌, தொழில்‌ நுட்ப பேச்சு, புகைப்படம்‌ எடுத்தல்‌, புதையல்‌ வேட்டை, குறும்படம்‌, மெஹந்தி, தனிப்பாடல்‌, தனி நடனம்‌, குழு நடனம்‌, மாக்‌ கோர்ட்‌, வெரைட்டி என்டா்டெயின்மென்ட்‌, பேஷன்‌ ஷோ ஆகியவற்றில்‌ மாணவர்கள்‌ பங்கு கொண்டு தங்களது‌ திறமைகளை வெளிக்கொணர உள்ளனர்‌.



இந்த நிகழ்ச்சியின்‌ சிறப்பு விருந்தினராக நடிகரும்‌ மற்றும்‌ தொலைக்காட்சி தொகுப்பாளருமான மா.கா.பா.ஆனந்த்‌, மற்றும்‌ சன்‌ டிவி புகழ்‌ தமிழ்‌ தென்றல்‌ மதுரை ராமகிருஷ்ணன், கலைஞா்‌, எழுத்தாளர்‌ மற்றும்‌ பாடலாசிரியர்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டு சிறப்பித்து, சிறப்புரையாற்ற உள்ளனர்.

மேலும்‌ ரத்தினம்‌ கல்லூரியின்‌ முதன்மை நிர்வாகியும்‌, செயளலாருமான முனைவர்‌ ஆர்‌. மாணிக்கம்‌ “ரத்தினம்‌ விழா 2023” தலைமையேற்று தலைமையுரையாற்ற உள்ளார்‌. கல்லூரியின்‌ ஆண்டு அறிக்கையை கல்லூரி முதல்வா்‌ முனைவர்‌ பாலசுப்பிரமணியன்‌ வாசிக்க உள்ளார்‌.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...