கோவை வேளாண் பல்கலையில் விதை ஆய்வு மற்றும் பயிர்‌ ஆராய்ச்சி‌ திட்ட ஆய்வு‌ கூட்டம் - விஞ்ஞானிகள் பங்கேற்பு!

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர்‌ ஆராய்ச்சித்‌ திட்ட ஆய்வுக்‌ கூட்ட‌த்தில், அகில இந்திய அளவில் சுமார் 250க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும் பயிர்‌ ஆராய்ச்சித்‌ திட்ட ஆய்வுக்‌ கூட்ட‌ம் நடைபெற்றது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில் இன்று‌ (09.05.2023) 26வது வருடாந்திர வல்லுநர்‌ விதை ஆய்வுக்‌ கூட்டம்‌ மற்றும்‌ 38வது வருடாந்திர அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர்‌ ஆராயச்சித்‌ திட்ட ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இந்த நிகழ்வானது, இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகத்தின்‌, இந்திய விதை ஆராய்ச்சி நிறுவனம்‌, மாவ்‌ மற்றும்‌ விதை மையம்‌ ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தால்‌ நடத்தப்பட்டது.

அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித்‌ திட்டத்தின்‌ கீழ்‌ விதை பயிர்களுக்கான ஆராய்ச்சிகள்‌ மேற்கொண்டதை‌ பற்றி இந்திய விதை ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ சஞ்சய்‌ குமார்‌ எடுத்துரைத்தார்‌.

இதனையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுதில்லி இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழக உதவி இயக்குநர்‌ விதை, முனைவர்‌ டி.கே.யாதவா சிறப்புரை வழங்கினார்‌. அப்போது, தரமான விதை உற்பத்தி மற்றும்‌ விநியோகத்தில்‌ தனியார்‌ நிறுவனங்கள்‌ ஈடுபடுவதை அதிகரிப்பதற்கான சிறப்பு திட்டங்களை‌ செயல்படுத்த வேண்டும்‌ என எடுத்துரைத்தார்‌.

தொடர்ந்து, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ வெ.கீதாலட்சுமி உரையாற்றிய போது,



விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப‌ துறையானது 1972 ஆம்‌ ஆண்டு இந்தியாவிலேயே முதன்‌ முறையாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது 50 வருடங்களைக்‌ கடந்து பொன்விழா ஆண்டினை இவ்வருடம்‌ கொண்டாடுகிறது.

இந்தத்‌ துறையின்‌ வளர்ச்சிக்காக ஆரம்பத்திலிருந்து இன்று வரை பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்‌.

வேளாண்மை வளர்ச்சியில்‌ தரமான விதைகள்‌ முக்கிய பங்கு வகிக்கிறது.‌ தேசிய உணவு பாதுகாப்பில்‌ விதைகள்‌ முக்கிய அங்கமாக விளங்குகிறது‌.‌ புதிய தொழில்நுட்பங்களான விதை முலாம்‌ பூசுதல்‌, விதைப்பூச்சு மற்றும்‌ விதை வில்லைகள்‌ ஆகியவற்றையும்‌ வெளியிட்டார்‌.

விழாவில்‌ பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில்‌ அகில இந்திய ஒருங்கிணைந்த பயிர்‌ ஆராய்ச்சி திட்டத்தின்‌ 2022-23ம்‌ ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விதை மையத்திற்கு, இந்த ஆண்டிற்கான சிறந்த விதை ஆராய்ச்சி நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது. மேலும், சிறந்த விதை உற்பத்தி நிறுவனத்திற்கான விருதுகள்‌ பாலாம்பூர், செளத்ரி ஷர்வன்‌ குமார்‌ கிரிஷி விஷ்வ வித்யாலயா மற்றும்‌ லூதியானாவில் உள்ள இந்திய வேளாண்‌ ஆராய்ச்சிக்‌ கழகத்தின்‌, இந்திய சிறுதானிய ஆராயச்சி நிறுவனத்திற்கு‌ம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்‌, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ விதை அறிவியல் மற்றும்‌ தொழில்நுட்ப‌ துறையின்‌ ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்‌ தலைமையுரையை புதுதில்லி வேளாண்‌ ஆராயச்சிக்‌ கழக‌ துணை இயக்குநர்‌ முனைவர்‌ டி.ஆர்‌.ஷர்மா வழங்கினார். நன்றியுரையை விதை மைய இயக்குநர்‌, முனைவர்‌ உமாராணியும்‌ வழங்கினர்‌.



இதில்,‌ தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ பல்வேறு இயக்குனரகங்களும்‌, தனியார்‌ விதை உற்பத்தி நிறுவனங்களும்‌ விதை உற்பத்தியில்‌ பயன்படும்‌ இயந்திரங்களையும்‌, தொழில்நுட்பங்களையும்‌ கருத்துக்காட்சியாக அமைத்திருந்தனர்‌.

இதில், அகில இந்திய அளவில்‌ சுமார்‌ 250க்கும்‌ மேற்பட்ட விஞ்ஞானிகள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ வேளாண்‌ பெருமக்கள்‌ இந்த நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டு பயன்பெற்றனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...