கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முதன்மை தேர்வர்களுடன் உரையாடிய வணிக வரி உதவி ஆணையர்!

கோவை வணிக வரி உதவி ஆணையர் ஜெயபிரகாஷ், கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் முதன்மை தேர்வர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில், தனது அனுபவங்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கியது தேர்வர்கள் மத்தியில் புது நம்பிக்கையை உருவாக்கி உள்ளது.


கோவை: கோவையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் வணிக வரி உதவி ஆணையர் ஜெயபிரகாஷ் முதன்மை தேர்வர்களுடன் உரையாடினார்.

கோவை சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி வளாகத்தில் GROUP-I (MAINS) முதன்மை தேர்வர்களுக்காக வணிக வரி உதவி ஆணையர் ஜெயபிரகாஷ் தேர்வர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



உதவி ஆணையர் ஜெயபிரகாஷ், கண் பார்வை இல்லாதவராக இருப்பினும் தனது கடின முயற்ச்சியால் குரூப்-1 தேர்வில் வெற்றி கண்டு தற்போது பணியில் உள்ளார். குறைபாடுகள் சாதிக்க ஒரு தடை இல்லை என்பதை இவ்வுலகுக்கு உரக்க சொல்லியிருக்கிறார்.

மேலும் முதன்மை தேர்வை குறித்த தேர்வர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்த நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் மற்றும் அறிவுரைகள் மாணவர்கள் மத்தியில் புது நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...