கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் தமிழ்மன்ற நிறைவு விழா - மாணவ, மாணவியர் பங்கேற்பு

கோவையில் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தமிழ் மன்ற நிறைவு விழா நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையின் தமிழ் மன்றம் நிறைவு விழா நடைபெற்றது.



இதில் பட்டிமன்றப் பேச்சாளர் புலவர்.மா. இராமலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தமிழ் மொழியின் தொன்மை, இனிமை மற்றும் சிறப்புகள் குறித்தும் தமிழ் மொழியின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து பேசினார்.



மேலும், நாம் அனைவரும் வீட்டில் தமிழ் மொழியில் பேச வேண்டும். குழந்தைகளுக்கு தமிழின் மகத்துவத்தினை எடுத்து கூறுங்கள். தாய் மொழியில் எளிதில் எதையும் புரிந்து கொள்ள முடியும். தமிழ் மொழியின் சிறப்பை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும் எனவும் அவர் அப்போது வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்விக் குழுமங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன், கல்லூரி முதல்வர் ஆர்.. ஜெகஜீவன், துணை முதல்வர் விஜய சாமுண்டீஸ்வரி, பேராசிரியர்கள், மாணவ-மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...