கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் டிசைன் பேஷன் ஷோ - சிறந்த ஆடை வடிவமைப்பு பரிசு வழங்கி கௌரவிப்பு!

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் டிசைன் பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. 5 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆடை வடிவமைப்பாளர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு.


கோவை: கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற பேஷன் ஷோவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டம் குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் துறை சார்பில் டிசைன் பேஷன் ஷோ நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக ஆடை வடிவமைப்பாளர் எம்.வருண்யா தேவி கலந்து கொண்டார்.

மேலும், ஹெர்ஸ் அப்பேரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளர் வி .எம். மௌஸிக் நடுவராக கலந்து கொண்டு சிறந்த வடிவமைப்பாளர்களை தேர்ந்தெடுத்தார்.



இந்த பேஷன் ஷோ போட்டியில் ஆண், பெண் இருவரின் ஆடைகளை கொண்டு வடிவமைத்த மாடல், குழந்தைகளுக்கான மாடல், பூ லோகோ வடிவில் ஆடை வடிவமைத்த மாடல், இம்பீரியல் கிரிஸ்டலின் கருப்பொருளை சித்தரிக்கும் மாடல், மற்றும் பல்வேறு ஜாதக குறியீடுகளில் சுழலும் ஜாதகம் போன்ற மாடல் உட்பட மொத்தம் ஐந்து தலைப்பில் போட்டி நடைபெற்றது.



மேலும் இந்த நிகழ்ச்சியில் நடனம் மற்றும் பேஷன் நடை ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதில் சிறந்த ஆண் வடிவமைப்பாளருக்கான விருதுகள் இத்துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி மைவிழி பிரியதர்ஷினிக்கு வழங்கப்பட்டது. சிறந்த பெண் வடிவமைப்பாளர்களாக மூன்றாம் ஆண்டு மாணவிகள் வர்ஷா மற்றும் ஸ்ரீ நிவேதா தேர்வு செய்யப்பட்டனர்.



சிறந்த குழந்தைகள் ஆடை வடிவமைப்பாளராக இதே துறையின் மூன்றாம் ஆண்டு மாணவி பிருந்தா தேர்வு செய்யப்பட்டனர். மேலும் சிறந்த தீம் ஆக உருவாக்குதல் அழித்தல் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதனிடையே இக்கல்லூரியின் முதல்வர் ஆர்.ஜெகஜீவன் தலைமை தாங்கி பேசினார். இதில் துணை முதல்வர் ஆர்.விஜயசாமுண்டீஸ்வரி, டீன் மரியா, இத்துறையின் தலைவர் வி.ஏ.ரின்சி ஆண்டனி, விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக இத்துறையின் ருத்ரா காமாட்சி நன்றி தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...