தாராபுரம் அரசு கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா - அமைச்சர் கயல்விழி பங்கேற்பு!

உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தாராபுரம் அரசு கலைக்கல்லூரியின் முதலாம் ஆண்டு விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் அரசு கலைக்கல்லூரியின் முதலாம் ஆண்டு விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஃபைவ் கார்னர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.

இந்த நிலையில் அரசு கலைக்கல்லூரியின் முதலாம் ஆண்டு விழா, உடுமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மன்ற தலைவர் பொறியாளர் பாப்பு கண்ணன் திமுக நகர செயலாளர் முருகானந்தம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

இவ்விழாவில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு இளநிலை பயின்று விளையாட்டில் வெற்றி பெற்ற 50 மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்கினார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...