கோவையில் தொழில் முனைவோர் 20X மாநாடு - ஆர்வத்துடன் தொழில் முனைவோர் பங்கேற்பு!

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் மாநாட்டில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.



கோவை: கோவை இரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் ஜி20 -ன் உடைய தொழில் முனைவோர் 20X எனும் மாநாடு நடைபெற்றது.

ஏஐசி ரைஸால் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், மத்திய மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள், 20க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் 1000 மேற்பட்ட தொழில் முனைவோர்கள் உட்பட இந்தியாவின் தொழில் முனைவோர் சூழலின் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஏஐசி ரைஸின் தலைமை நிர்வாக அதிகாரிகள் டாக்டர். மதன் ஏ செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐசி ரைஸின் துணைத் தலைவர் டாக்டர். நாகராஜ் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஏஐசி ரைஸ் மூலமாக பல்வேறு கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஸ்மார்ட் மைன்ட் ஹேக்கதான் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சி.இ.ஓ., ஜுனியர் எனும் போட்டிகளின் இறுதி சுற்றுகள் மற்றும் பரிசுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

மேலும் ஸ்டார்ட்அப் 20 எக்ஸ் எனும் நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஸ்டார்ட்அப் 20 எக்ஸ் ஸ்பாட் லைட்-ல் நடிகர் மற்றும் தொகுப்பாளர் கோபிநாத், பயோஃபியுல் -ன் தலைமை நிர்வாக அதிகாரி கிஷன் கருணாகரன், விட்டி வைஸ் -ன் தலைமை நிர்வாக தொலைநோக்கு அதிகாரி சன்மதி கார்த்திக், கோவை பி.ஸ்.ஃப் -ன் நிறுவனர் அனுபா ஆகியோர் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் அறிவுரைகளை புது தொழில் முனைவோர்களுக்கு வழங்கினர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துரையாடலில் பாலிசி பஜாரின் தலைவர் ராஜீவ் குமார் குப்தா, நிதி ஆயோக் -ன் இயக்குநர் ரோஹித் குப்தா, டிலாய்ட் -ன் கூட்டாளர் கல்பனா ஜெய்ன் மற்றும் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு -ன் மிஷன் இயக்குநர் சிவராஜா ராமநாதன், கோயம்புத்தூரின் ஸ்மார்ட் சிட்டி கமிஷ்னர் பிரதாப், டாசால்ட் சிஸ்டம்ஸ் -ன் உலகளாவிய விவகாரங்களின் இயக்குநர் ராஜீவ் ஆரமடகா ஆகியோர் உட்பட பலர் உரையாடினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...