கோவை கே.எஸ்.ஜி கல்லூரியில் பாவேந்தர் பாரதிதாசன் விழா - சிறப்பு கவியரங்கம்!

கோவையில் உள்ள அருவி வாசகர் வட்டம் கே.எஸ்.ஜி கல்லூரி இணைந்து நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் விழாவையொட்டி கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் தலைமையில் சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது. இதில், புதியதோர் உலகத்தில், ஒளி, இருள், தமிழ், அழகு, காதல், கடமை ஆகிய தலைப்புகளில் கவிதைகள் வாசிக்கப்பட்டன.


கோவை: கோவை அருவி வாசகர் வட்டம் மற்றும் கே.எஸ்.ஜி கல்லூரி இணைந்து நடத்திய பாவேந்தர் பாரதிதாசன் விழாவை யொட்டி சிறப்பு கவியரங்கம் நடைபெற்றது.

அருவி வாசகர் வட்டம் மற்றும் கே.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி பாவேந்தர் பாரதிதாசன் விழாவை நடத்தியது.

இந்த நிகழ்வையொட்டி கவிஞர். பா. மீனாட்சி சுந்தரம் தலைமையில் புதியதோர் உலகத்தில், ஒளி, இருள், தமிழ், அழகு, காதல், கடமை ஆகிய தலைப்புகளில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது.



இதில், கவிஞர் அ.ரோசிலின் வின்சி, முனைவர் கவிஞர் நா.இரஞ்சித், முனைவர், கவிஞர் மா.இராசா, கவிஞர் அ.இராமகிருட்டிணன், கவிஞர் கோ.பிரகாசு இராசு, கவிஞர். அ. கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தங்களின் விருப்ப தலைப்புகளின் கீழ் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது கவிதைகளை படைத்தனர்.

இக்கவியரங்கத்துக்கு கே.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் (பொறுப்பு) செ.நாகராசன் வரவேற்புரையும், முதல்வர் முனைவர். மு. நாகராசன் மற்றும் துணை முதல்வர் முனைவர் ம.பாஸ்கரன் இருவரும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில், மூத்த செய்தியாளர் கவிஞர் பா.மீனாட்சி சுந்தரம் சிறப்பு கவிதையுடன் கூடிய சிறப்புரையை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து அருவி வாசகர் வட்டத்தைச் சார்ந்த ம.மூ.சகிகோகுல், அருவி வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்கள் மற்றும் இதுவரை முன்னெடுத்த நிகழ்வுகள் குறித்தும் விளக்கினார்.

இறுதியாக தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர். க. ஜெகதீஸ்வரி நன்றியுரையுடன் கவியரங்கம் நிறைவு பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த இந்த மேடைக் கவியரங்கத்தை நிகழ்வு முடியும் வரை மாணவர்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...