உடுமலையில் உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி - 12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 12ம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டார பகுதிகளை சேர்ந்த பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: உடுமலையில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் நான்கு மையங்களில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டார பள்ளிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

குடிமங்கலம், மடத்துக்குளம் பள்ளிகளுக்கு திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்கள், அரசு கல்லூரி விரிவுரையாளர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள் உள்ளிட்டோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்கள் குறித்தும் படிப்பு பிரிவுகள், வேலைவாய்ப்புகள், மத்திய மாநில அரசு துறைகள் தொழிற்பயிற்சி குறித்தும் விளக்கினர்.

ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலைமை ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 மாணவர்கள் வீதம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட மாணவர்கள், உயர் கல்வி தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை கருத்தாளர்களிடம் கேட்டு விளக்கங்களை பெற்றுக் கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...