உடுமலை அருகே வீடு தோறும் சென்று மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு!

பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உடுமலை அருகே உள்ள இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பாக ஆசிரியர் கண்ணபிரான், தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆகியோர் வீடுதோறும் சென்று மாணவர் சேர்க்கை குறித்து எடுத்துக் கூறினர்.


திருப்பூர்: உடுமலை அருகே வீடு தோறும் ஆசிரியர்கள் சென்று மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி, 5வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உடுமலை அருகே உள்ள இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பாக அரசு பள்ளியில் நலத்திட்டங்கள் பற்றியும், தமிழ் வழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் ஆசிரியர் கண்ணபிரான், தலைமை ஆசிரியர் சாவித்திரி ஆகியோர் வீடுதோறும் சென்று மாணவர் சேர்க்கை குறித்து எடுத்துக் கூறினர்.

இதைத்தொடர்ந்து துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. பள்ளி வயது நிரம்பிய குழந்தைகளை தவறாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று மாணவர்களும் ஆசிரியர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...