பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில் இன்றைய தேர்வில் கோவை மாவட்டத்தில் மட்டும் 927 பேர் பங்கேற்கவில்லை. தமிழ் மொழி தேர்வில் கேள்விகள் சுலபமாக இருந்தாதாக மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்


கோவை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தாள் தேர்வில் கேள்விகள் சுலபமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடைபெற்றது.



பத்தாம் வகுப்பு தேர்வை கோவை மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 41,530 மாணவர்களில் 40,603 மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதியதாகவும், 927 பேர் இந்த தேர்வில் பங்கேற்கவரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை ராஜா தெருவில் உள்ள கோயம்புத்தூர் துணி வணிகர் சங்கம் (CCMA) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த மையத்தில், பத்தாம் வகுப்பு தேர்வுகளை முடித்து வெளியே வந்த மாணவ மாணவிகளுடன் உரையாடிய போது, மொழித்தாள் எளிதாக இருந்ததாகவும், நல்ல மதிப்பெண் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசியபோது, கணித தேர்வு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், ஆசிரியர்கள் எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து, மதிப்பெண்களை பெற உரிய பயிற்சி அளித்துள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த பள்ளியின் தமிழ் ஆசிரியை ஹேமலதா கூறியதாவது, ஒட்டுமொத்தமாக பார்க்கும் தமிழ் தேர்வில் கேள்விகள் சுலபமாகவே இருந்தன. ஆனால் 2 மதிப்பெண் கேள்விகள் மட்டும் பாடத்திற்குள் இருந்து கேட்கப்பட்டதால் மாணவர்களுக்கு சிறிது சிரமம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...