தொண்டாமுத்தூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமேற்பு விழா!

கோவை தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமேற்பு விழாவில் இளநிலை வணிக நிர்வாகவியல், பொருளியல், ஆங்கில இலக்கியம், வணிகவியல் பி.ஏ, வணிகவியல் சி.ஏ, கணிதம் ஆகிய ஆறு பாடங்களைச் சேர்ந்த சுமார் 340 மாணவர்கள் பட்டம் பெற்று பட்டமேற்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 340 மாணவர்கள் பட்டம் பெற்று பட்டமேற்பு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.

தொண்டாமுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டு, பின்பு 2020-21 ஆம் கல்வியாண்டு முதல் அரசுக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்த முதல் மற்றும் இரண்டாவது பட்டமேற்பு விழா 06.04.2023 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

விழாவில் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் வெ. கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இவ்விழாவில் இளநிலை வணிக நிர்வாகவியல், பொருளியல், ஆங்கில இலக்கியம், வணிகவியல் பி ஏ, வணிகவியல் சி ஏ, கணிதம் ஆகிய ஆறு பாடங்களைச் சேர்ந்த சுமார் 340 மாணவர்கள் பட்டம் பெற்று பட்டமேற்பு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

மேலும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் கல்லூரி அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்குத் தர சான்றிதழ்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

தனது உரையில் அவர் பேசியதாவது,



தமிழக அரசு அனைவரும் கல்வி கற்க வேண்டும், பொருளாதாரம் அறியாமை போன்ற காரணங்களால் அவரது கல்வியானது இடையில் தடைபடக்கூடாது என்பதற்காக கொண்டு வந்த திட்டங்கள் தான் புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்கள். இது பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திட்டங்கள்.

கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதல் 10 இடங்களில் மதிப்பெண்கள் பெற்றவர்கள் ஒரு நிறுவனத்தில் சம்பளம் பெறுபவராக இருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக இருப்பவர்கள் எல்லாம் சம்பளம் கொடுக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

எனவே கல்வி என்பது வேறு அறிவு என்பது வேறு ஆகும். ஒவ்வொரு மாணவரும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வெளியே செல்லும் போது நான் முதல்வன் என்று சொல்லும் அளவுக்கு நமது அரசின் திட்டங்கள் இருப்பதை இந்த இடத்தில் நினைவு கூறுகிறேன். இவ்வுலகில் எதை நாம் முழுமையாக நம்புகிறோமோ அதுவாக தான் மாறுகிறோம் எனவே எண்ணங்களுக்கு பலம் உண்டு என்பதை உணர வேண்டும்.

தங்களுக்குள் ஒரு தன்னம்பிக்கை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், யாருக்கும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக் கூடாது, பிறர் பேசுவதற்காக தன்னை தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டாம், பிறரின் விமர்சனங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முன் செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் கலைவாணி பட்டமேற்கும் விழாவிற்கு வருகை புரிந்தவர்களை வரவேற்று, கல்லூரி ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் துணை முதல்வர் முனைவர் செ.தேவராஜ் அருமைநாயகம் உள்ளிட்ட துறை தலைவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...