கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் ‘துரோணா 2023’ விழா

கோவை கிணத்துக்கடவில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் துரோணா 2023 என்ற பெயரில், கலை, விளையாட்டு மற்றும் உணவுத் திருவிழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் மாணவர்கள், தங்கள் பாட்டு, நடனம் மற்றும் வீர விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை தட்டிச்சென்றனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற துரோணா 2023 என்ற முப்பெரும் விழா நடைபெற்றது.

கோவை கிணத்துக்கடவில் உள்ள ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் கலை, விளையாட்டு மற்றும் உணவுத் திருவிழா என முப்பெரும் விழாவாக ‘துரோணா 2023, என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், முதல் நாளான நேற்று (31.03.2023) கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக சிலம்பம், கிராமப்புற நடனங்கள் உள்பட பல பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



மேலும் இந்த நிகழ்வில் திரைப்பட நடிகரும், பேச்சாளருமான ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை பற்றி பேசி மாணவர்களை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார்.



இதேபோல், இந்திய வாலிபால் அணியில் பங்கேற்று விளையாடும் பிரபல வீரர் வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்துவம் மற்றும் பயன்களை எடுத்துரைத்தார்.

மேலும் அவர், நடப்பாண்டில் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிந்த ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரியின் மாணவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் மாணவர்கள் தங்கள் பாட்டு, நடனம் மற்றும் வீர விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.

மேலும் இந்த விழாவில் பேசிய கல்லூரியின் இயக்குனர் ராஜாராம், துரோணா முப்பெரும் விழா மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த ஒரு தளமாக விளங்குவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சூப்பர் சிங்கர் புகழ் பெற்ற அஜய் கிருஷ்ணா, ரக்ஷிதா, ரேஷ்மா, மற்றும் அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பாடல்கள் பாடி மாணவர்களை மகிழ்வித்தனர்.

இதனை தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் சுதா மோகன்ராம் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். கல்லூரியின் தொழில்துறை நல்லுறவு டீன் கண்ணன் நரசிம்மன் வரவேற்புரையாற்றினார்.

ஆராய்ச்சித்துறை டீன் கருப்புசாமி, கல்வித்துறை டீன் நிர்மலா, பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...