ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரியின் 12வது ஆண்டு விழா - சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு!

ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரியின் 12வது ஆண்டு விழா நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சாதனைகள் புரிந்த துறைக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் உள்ள ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரியின் 12ஆம் ஆண்டு விழாவில் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ரத்தினம் தொழில்நுட்ப கல்லூரியின் 12வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்றைய தினம் (மார்ச் 31) நடைபெற்றது. ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் முனைவர் மதன் ஆ செந்தில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எம்பாசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜோஷ்வா டேவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு, ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் முனைவர்.பா.நாகராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில் மாணவர்கள் கற்றலை வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும், மேலும் சமூகத்திற்கு அவர்களால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சாதனைகள் புரிந்த துறைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...