கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் கலர்ஸ் புகைப்படக் கண்காட்சி - சிங்கப்பூர் புகைப்பட கலைஞர் ராஜ்பாரதி பங்கேற்பு!

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் கலர்ஸ் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை சிங்கப்பூரை சேர்ந்த மேக்ரோ புகைப்படக் கலைஞர் ராஜ் பாரதி கலந்து கொண்டு நிகழ்வை துவங்கி வைத்து பேசியபோது, இவ்வுலகம் மனிதர்கள் இல்லாமல் கூட வாழும், ஆனால் பூச்சிகள், பறவைகள் இல்லாமல் வாழாது என தெரிவித்தார்.


கோவை: கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை சிங்கப்பூரை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ராஜ் பாரதி பங்கேற்று துவக்கி வைத்தார்.

கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் கலர்ஸ் புகைப்படக் கண்காட்சி நேற்று (மார்ச் 31) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டி.பிருந்தா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கல்லூரி துணை முதல்வர் அங்குராஜ் முன்னிலை வகித்தார்.

இந்த விழாவி்ல் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூரைச் சேர்ந்த மேக்ரோ புகைப்படக் கலைஞர் ராஜ் பாரதி பங்கேற்று, புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது,

மிகவும் சிறிய பூச்சிகள் மற்றும் மலர்களை புகைப்படங்களில் பதிவு செய்வதே மேக்ரோ புகைப்படக் கலை. சிறிய வயதில் இருந்தே எனக்கு இருந்த புகைப்படக் கலை மீதான ஆர்வம்தான் இந்தத் துறைக்கு என்னை அழைத்து வந்தது.

தற்போது சிங்கப்பூர் மற்றும் மலேசியா காடுகளில் உள்ள சிறிய பூச்சிகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறேன். எனது பணியின் ஒரு பகுதியாக, கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் பூச்சி இனங்களை புகைப்படம் எடுத்தேன். அப்போது இதுவரை வி்ஞ்ஞானிகளால் கண்டறியப்படாத "குதிக்கும் சிலந்தி" (Jumping Spider) என்ற புதிய வகை சிலந்தியை கண்டறிந்து பதிவு செய்தேன்.

இவ்வாறு உலகம் அறியாத பூச்சி இனங்களை கண்டறிவதில் எனக்கு மிகவும் ஆர்வம். எனது புகைப்பட பயணம் செல்போனில் இருந்து தான் துவங்கியது. நான் எடுத்த புகைப்படங்கள், சிங்கப்பூரில் இருக்கும் ஊடகங்களில் வெளியானதால், அந்நாட்டின் சுற்றுலாத்துறை என்னை அழைத்து சிங்கப்பூரில் உள்ள காடுகளில் உள்ள பூச்சி இனங்களை ஆவணப்படுத்தக் கோரியது.

இன்றளவும் இந்தப் பணியை தொடர்ந்து செய்து வருகிறேன். இதுவரை சிங்கப்பூரில் இரண்டு வகையான புதிய பூச்சி இனங்களைக் கண்டறிந்துள்ளேன். காடுகளை பாதுகாக்க பூச்சி இனங்கள் மிகவும் அவசியம். பூச்சி இனங்களை மிகவும் உற்று நோக்கினால், பல்வேறு ஆச்சர்யமான விஷயங்களை கண்டறிய முடியும்.

மனிதர்கள் இல்லாமல் இந்த பூமி சிறப்பாக வாழும். ஆனால், பூச்சிகளோ, பறவைகளோ இல்லாமல், இந்தப் பூமியால் வாழ முடியாது என்பது யதார்த்தமான உண்மை. இந்த உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லவே இத்தகைய மேக்ரோ புகைப்படங்கள் மிகவும் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மற்றொரு சிறப்பு விருந்தனராக ஓவிய கலைஞர் மது கண்ணன் பங்கேற்றார். விஷுவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் எடுத்த புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...