கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பத்தாம் மற்றும் பதினொன்றாம் ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவும் தற்போது முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு விளக்கு ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழாவும் நடைபெற்றது.


கோவை: கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு விளக்கு ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழா நடைபெற்றது.



கோவை கற்பகம் செவிலியர் கல்லூரியில் பத்தாம் மற்றும் பதினொன்றாம் ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவும் தற்போது முதலாமாண்டு பயிலும் மாணவிகளுக்கு விளக்கு ஏற்றி உறுதி மொழி ஏற்கும் விழாவும் நடைபெற்றது.

இந்த விழாவில் முனைவர் வசந்தகுமார் நிர்வாக அறங்காவலர் மற்றும் தமயந்தி வசந்தகுமார், நிர்வாக அறங்காவலர் மற்றும் முனைவர் முருகையா, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் முனைவர் வெங்கடாஷலபதி, துணை வேந்தர் மற்றும் கல்லூரி முதல்வர் சுதா ஆகியோர் விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

கல்லூரியின் முதல்வர் சுதா வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில தாய் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் ஜெயஸ்ரீ சண்முகம் பங்கேற்று மாணவர்களை ஊக்குவித்தார்.

இவ்விழாவில் கவுரவ விருந்தினராக மாவட்ட தாய் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் விஜய லட்சுமி, பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் மேரி ரினா உறுதிமொழியை முன்மொழிந்தார். இதில் முதலாம் ஆண்டு மாணவிகள் விளக்கேற்றி உறுதிமொழி ஏற்றனர்.



மேலும் விழாவில் பட்டதாரிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



மேலும்‌ கடந்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பேராசிரியர் இலக்கியா நன்றியுரை ஆற்றி இவ்விழாவை நிறைவு செய்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...