கோவை கற்பகம் பல்கலையில் போதைப்பொருள்‌ எதிர்ப்பு விழிப்புணர்வு மாணவர்‌ சங்கம் தொடக்கம்!

கோவை கற்பகம் கல்வி நிறுவனம் சார்பில் ஈச்சனாரியில் உள்ள கற்பகம்‌ நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்‌ போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாணவர்‌ சங்கம் துவங்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தை கற்பகம் கல்வி குழும நிர்வாகத்தினர் துவங்கி வைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் ஈச்சனாரியில் உள்ள கற்பகம்‌ நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்‌ போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மாணவர்‌ சங்கம் துவங்கப்பட்டுள்ளது

கோவை‌ கற்பகம்‌ கல்வி நிறுவனங்கள்‌ சார்பில், போதைப்பொருள்‌ எதிர்ப்பு விழிப்புணர்வு மாணவர்‌ சங்கத்‌ தொடக்க விழாவானது, இன்று ஈச்சனாரியிலுள்ள கற்பகம்‌ நிகர்நிலை பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு துணைவேந்தர்‌ முனைவர்‌ வெங்கடாசலபதி தலைமையேற்றார்‌.



கோவை‌ மாவட்ட காவல்‌ கணிகாணிப்பாளர்‌ பத்ரிநாராயணன்‌ ஐ.பி.எஸ்‌ ‌சிறப்பு விருந்தனராக‌ கலந்துகொண்டு, போதைப்பொருள்‌ எதிர்ப்பு விழிப்புணர்வுச்‌ சங்கத்தில்‌ மாணவர்களது பங்களிப்பின்‌ இன்றியமையாமை குறித்து விளக்கினார்‌.

எண்ணங்களின்‌ எழுச்சியால்‌ இமயத்தைத்‌ தொட வேண்டிய இளைஞர்கள்‌, போதை மயக்கத்தால்‌ எதிர்காலத்தை‌ தொலைக்கின்ற அவலத்தை எடுத்துரைத்தார்‌.

போதைப்பொருளின்‌ மயக்கம்‌, ஒட்டுமொத்த வாழ்க்கையையும்‌ படுகுழியில்‌ வீழ்த்துவதை இளைஞர்கள்‌ உணர வேண்டும். குடும்பப்‌ பொறுப்பும்‌, சமுதாயப்பொறுப்பும்‌ தமது அடப்படைக்‌ கடமை என்பதை உணர்இன்ற இளைஞர்கள்‌ உடலாலும்‌, மனதாலும்‌ வலுப்பெற்றவர்களாக விளங்குகின்றனர்‌.



தாமும்‌ உணர்ந்து, ஒட்டுமொத்த இளைஞர்‌ சமுதாயத்தையும்‌ உயர்த்துகின்றனர்‌; ஆனால்‌, போதைக்கு அடிமையாகின்ற இளைஞர்கள்‌, தாம்‌ மட்டுமன்றி தமது நட்பு வட்டத்தினரும்‌ சீரழியக்‌ காரணமாகின்றனர்‌.

அத்தகைய அவலத்தைத்‌ தவிர்க்க வேண்டியே இளைஞர்கள்‌ போதைபொருள்‌ பயன்பாட்டிலிருந்து தம்மைத்‌ தாமே பாதுகாத்தும்‌, இளைஞர்‌ சமுதாயத்தை‌ பாதுகாத்தும்‌ விழிப்புணர்வுடன்‌ செயல்பட வேண்டும்‌.

பள்ளிக்குழந்தைகள்‌, பதின்‌ பருவத்தினர்‌, கல்லாரி மாணவர்கள்‌ என்று அனைத்து இளம்‌ வயதினர்‌ மற்றும்‌ பெரியோர்கள் இடத்திலும்‌ போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை போதைப்பொருள்‌ எதிர்ப்பு மாணவர்‌ சங்கத்தினர்‌ கொண்டு சேர்க்க வேண்டும்‌.

அத்துடன்‌, போதைப்பொருள்களுக்கு அமமையாகி, மாணவர்கள்‌ எதிர்காலத்தை‌ தொலைக்கின்ற அவலங்களையும்‌, அதிலிருந்து மீள்கின்ற மாணவர்களின்‌ சாதனை வரலாறுகளையும்‌ மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்‌.



போதைப்பொருள்‌ பயன்பாடு மட்டுமன்றி, அவை குறித்த கருத்துப்‌ பரிமாற்றங்களும்‌ குற்றங்களாக விளங்குவதை போதைப்பொருள்‌ எதிர்ப்பு விழிப்புணர்வு சங்கத்தினர்‌ மாணவ சமுதாயத்தினரிடம்‌ கொண்டு சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில்‌ கற்பகம்‌ மருத்துவக்‌ கல்லூரி துணை முதல்வர்‌. டாக்டர்‌. நிர்மலா, கற்பகம்‌ உயர்கல்விக்கழகப்‌ பதிவாளர்‌ முனைவர்‌ ரவி, கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ விஜயகுமார்‌, கற்பகம்‌ தொழில்நுட்பக்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ மணிமாறன்.‌

மேலும், கற்பகம்‌ மருந்தியல்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ மோகன்‌, கற்பகம்‌ உயர்கல்வி கழகத்தின்‌ மாணவர்‌ நல முதன்மையர்‌ முனைவர்‌ ப. தமிழரசி ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. போதைப்பொருள்‌ எதிர்ப்பு விழிப்புணர்வு மாணவர்‌ சங்கத்‌ தொடக்க விழாவினை மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ ஆதி பாண்டியன்‌ ஒருங்கிணைத்தார்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...