பல்லடம் அருகே தனியார் கல்லூரியில் நெருப்பில்லா சமையல் போட்டி - மாணவர்கள் பங்கேற்பு!

பல்லடம் அருகேயுள்ள அவிநாசி பாளையத்தில் உள்ள ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் "MAGMA 2023" என்ற பெயரில் கல்லூரிகள் இடையேயான கலாச்சார விழா நடைபெற்றது. இதில் முகத்தில் ஓவியம் வரைதல், கை நகங்களில் ஓவியம் வரைதல், தீயில்லா சமையல் போட்டி நடைபெற்றது.


திருப்பூர்: பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நெருப்பில்லா சமையல் போட்டியில் உற்சாகத்துடன் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசி பாளையத்தில் உள்ள ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லூரியில் இன்று மேலாண்மை துறை சார்பில் "MAGMA 2023" என்ற பெயரில் கல்லூரிகள் இடையேயான கலாச்சார விழா நடைபெற்றது.



இதில் முகத்தில் ஓவியம் வரைதல், கை நகங்களில் ஓவியம் வரைதல், தீயில்லா சமையல் போட்டி, காய்கறிகள்-பழங்களை பயன்படுத்தி அழகு பொருட்கள் தாயரித்தல், நடன போட்டி, குறும்பட போட்டி மற்றும் குப்பை பொருட்களை பயன்படுத்தி கைவினை பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.



இந்நிகழ்ச்சியில் தீ இல்லாமல் சமைக்கும் போட்டியில் மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு கலந்து கொண்டனர்.



கம்பு பால், சிறுதானிய லட்டு, கடலை மிட்டாய் லட்டு, சாலட் போன்ற பல்வேறு உணவு வகைகளை நெருப்பு இல்லாமல் தயார் செய்து காட்சிக்கு வைத்தனர்.



இதேபோன்று பழங்கள் காய்கறிகளை பயன்படுத்தி முள்ளம்பன்றி, விநாயகர், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் ஆகியவற்றை செய்து மாணவிகள் காட்சிப்படுத்தினர்.



மேலும் முகங்களில் வண்ணங்களை பயன்படுத்தி ஓவியம் வரையும் போட்டியிலும் பல்வேறு மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...