கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு NAAC அளித்த சிறப்பு அந்தஸ்து!

கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) நான்காவது சுற்றில் 4க்கு 3.63 என்ற புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த கிரேடு புள்ளி சராசரியுடன் (CGPA)ஏ பிளஸ் பிளஸ் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.


நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். அத்தோடு, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) தகுதிச் சான்றிதழையும் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் நிர்ணயிக்கப்படுவதோடு, மத்திய அரசின் நிதியையும் பெற முடியும்.

அந்த வகையில், கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (NAAC) நான்காவது சுற்றில் 4க்கு 3.63 என்ற புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த கிரேடு புள்ளி சராசரியுடன் (CGPA) ஏ++ அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரமானது 30.03.2023 முதல் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

இந்த பல்கலைக்கழகமானது கடந்த 2004, 2009 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட 3 சுற்றுகளில் ஏ அந்தஸ்தைப் பெற்றிருந்தது. இந்த ஆண்டு, கடந்த மூன்று சுற்றுகளை விட அதிகமாக புள்ளிகளைப் பெற்றுள்ளது. பாடத்திட்ட அம்சங்கள் அடிப்படையில், ஏழு வெவ்வேறு அளவுகோல்களில் பெறப்பட்ட கிரேடு புள்ளிகளின் சராசரி மதிப்பெண் அடிப்படையில் தற்போதைய மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கற்பித்தல்-கற்றல் மற்றும் மதிப்பீடு, ஆராய்ச்சி, புதுமை மற்றும் நீட்டிப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் கற்றல் வளங்கள், மாணவர் ஆதரவு மற்றும் முன்னேற்றம், ஆளுமை, தலைமை மற்றும் மேலாண்மை மற்றும் நிறுவன மதிப்புகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் 3.63 CGPA என்பது தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் கவுன்சிலின் (NAAC)-ன் ஏழு மதிப்பீட்டு அளவுகோல்களிலும் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு மற்றும் செயல்திறனைக் குறிப்பதாகும்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...