கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் ஆராய்ச்சிக்கான புதிய முறை குறித்த பயிலரங்கம்!

கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணி துறை சார்பில், 21ஆம் நூற்றாண்டில் ஆராய்ச்சிக்கான புதிய முறைகளை ஆராய்தல் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இதில், ஏராளமான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கோவை: கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் ஆராய்ச்சிக்கான புதிய முறை குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.

கோவை குனியமுத்தூரில் உள்ளஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப்பணித்துறை சார்பில் கல்லூரி வளாகத்தில், ‘21ஆம் நூற்றாண்டில் ஆராய்ச்சிக்கான புதுமையான முறைகளை ஆராய்தல்’ என்ற தலைப்பில் பயிலரங்கம் நடத்தியது.



சென்னை லயோலா கல்லூரியின் சமூகப்பணி துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஜே.எம்.அருள்காமராஜ் பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சிப் பட்டறையில் மாணவர்களிடம் உரையாடினார்.

இதில் அவர் பேசியதாவது, 21 ஆம் நூற்றாண்டில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான ஆராய்ச்சி முறைகள் கண்டுபிடிப்பதில் ஆராய்ச்சிகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆராய்ச்சியில் அனைவரும் ஈடுபடுவதுகாலத்தின் தேவை.

புதிய அறிவை உருவாக்குவதற்கும், சமூகக் கொள்கைகள்,திட்டங்களை மேம்படுத்துவதற்கும், சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஆராய்ச்சி அவசியம். சமூகத்தில் பல பிரச்சனைகள் சமூக வளர்ச்சியை பாதிக்கிறது.

இந்த பிரச்சனைகளைமாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். சமூகத்தில் நிஜ உலகப் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை கண்டறியவும். எம்.எஸ்.டபிள்யு மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்.

சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு காண புதிய மற்றும் புதுமையான ஆராய்ச்சி முறைகளை உருவாக்க வேண்டும். வருங்கால சமுதாயம் புதிய மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது. எனவே பிரச்சினைகளை எதிர்கொள்ள ஆராய்ச்சியைப் பயன்படுத்த இதுவே சரியான தருணம்.

சமூகப் பிரச்சினைகள் பல வழிகளில் மக்களை பாதிக்கப் போகிறது. சமூகப்பணி மாணவர்கள்பிரச்சனைகளை நிவர்த்தி செய்து புதிய தீர்வை வழங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



21 ஆம் நூற்றாண்டில் ஆராய்ச்சிக்கு செல்லவும் புதுமையான வழிமுறைகள் ஆராய்வதற்கும் தேவையான திறன்கள் மற்றும் அறிவை மாணவர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த பயிலரங்கம் நடைபெற்றது.

இந்த பயிலரங்கில் முதல்வர் ஜெகஜீவன் தலைமை வகித்தார். சமூகப்பணி துறைத் தலைவர் அ .அழகர்சாமி வரவேற்றார், முதலாம் ஆண்டு எம் எஸ் டபிள்யூ மாணவி ஏ.காவியா நன்றி கூறினார். இந்த பயிலரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...