கோவை ஸ்ரீராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சோலார் போட்டோவோல்டிக் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு!

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சோலார் போட்டோவோல்டிக் திறன் மேம்பாட்டு மையத்தை ஆல்டஸ் சோலார் நிறுவனத்தின் குழு ஆலோசகர் இம்மானுவேல் பெர்டினன்ட் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், சோலார் போட்டோவோல்டிக் பயிற்சிப் பாடத்திட்ட கையேடும் வெளியிடப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சோலார் போட்டோவோல்டிக் திறன்மேம்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சோலார் போட்டோவோல்டிக் திறன்மேம்பாட்டு மையம் திறப்புவிழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இதில், கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.என். உமா வரவேற்புரையாற்றினார்.

ஆல்டஸ் சோலார் நிறுவனத்தின் குழு ஆலோசகர் இம்மானுவேல் பெர்டினன்ட் மையத்தினை திறந்து வைத்தார்.



எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் லக்ஷ்மி நாராயணசாமி மையத்தின் பெயர் பலகையை திறந்து வைத்தார்.



ஆல்டஸ் சோலார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பத்மநாபன், மாணவர்கள் உருவாக்கிய சூரிய சக்தியில் இயங்கும் பல்வேறு மாதிரி திட்ட படைப்புகளை பார்வையிட்டு அதன் விவரங்களை மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து இம்மானுவேல் பெர்டினன்ட் மாணவர்கள் இடையே பேசியதாவது, புதுப்பிக்கத்தக்க வளங்களில் சூரிய சக்தியானது இயற்கை நமக்களித்த மிகப்பெரிய அருட்கொடையாகும்.



புதுப்பிக்கதக்க வளமான சூரிய சக்தி ஆற்றலை நாம் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மின்னணு பொருட்களின் நுகர்வினை நாம் முறையாக பயன்படுத்துவதன் மூலம் இயற்கை வளங்களை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.ஆர்.அலமேலு, சோலார் போட்டோவோல்டிக் பயிற்சிப் பாடத்திட்ட கையேட்டினை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் இறுதியாக கல்லூரியின் துணை முதல்வர். டாக்டர். கோபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...