கோவை ரத்தினம் கல்லூரியில் பேஷன், குறும்பட போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பு!

கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் துறை மற்றும் ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறைகள் சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டி மற்றும் பேஷன் ஷோவில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



கோவை: கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற குறும்படம் மற்றும் பேஷன் ஷோவில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலை கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.



கோவை ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், காட்சித் தொடர்பியல் துறை மற்றும் ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறை இனணந்து நடத்திய F-SERIES (Fashion, Film and Food Festival) FESTIVAL 2023” ஃபேஷன், குறும்படம் மற்றும் உணவு திருவிழா, கடந்த மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, ரத்தினம் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.



ஒவ்வொரு ஆண்டை போலவே இந்தாண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த நிகழ்வில், கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிகில், படைவீரன், லிப்ட் உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகை அம்ரிதா கலந்து கொண்டார்.



மேலும், நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வுகளாக பாடகி கௌரி லட்சுமி குழுவினரின் மாபெரும் இசை நிகழச்சி (Gowry Lekshmi Live Concert) மற்றும் ப்ரோ ஹவுஸ் (Bro House) - A DJ Band நடத்திய DJ Party with Water Drums, Snow DJ ஆகியவை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரத்தினம் கல்விக் குழுமங்களின் இயக்குநர் ஷீமா செந்தில், ரத்தினம் கல்விக் குழுமங்களின் செயலாளர் மற்றும் முதன்மை தலைமை நிர்வாகி முனைவர் மாணிக்கம், மற்றும் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக காட்சி தொடர்பியல் துறை சார்பில் குறும்பட போட்டி, ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறை சார்பில் ஃபேஷன்ஷோ போட்டி மற்றும் காட்சித் தொடர்பியல் துறை மற்றும் ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறை இனணந்து நடத்திய உணவு திருவிழா ஆகியவை நடைபெற்றது.



இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் 1 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.

காட்சி தொடர்பியல் துறை சார்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. முதல் பரிசு - இழவு (பிக் மீடியா)

2. இரண்டாம் பரிசு - வடக்கன் (டீம் வடக்கன்)

3. மூன்றாம் பரிசு - தி லாஸ்ட் விஷ் - The Last Wish (டீம் பெர்லியன்ஸ்)

4. சிறந்த ஒளிப்பதிவுக்கான சிறப்பு குறிப்பு (Special Mention) விருது - கோதை களையும் பொழுது (டீம் கோதை களையும் பொழுது)

5. சிறந்த படத்தொகுப்புக்கான சிறப்பு குறிப்பு (Special Mention) விருது - ஹாட் அண்ட் ஸ்பைசி (டீம் ஓரிஜன்ஸ்)

ஆடை வடிவமைப்பு மற்றும் ஃபேஷன் துறை சார்பிலான ஃபேஷன்ஷோ போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் பின்வருமாறு:

1. முதல் பரிசு - SRM பல்கலைக்கழகம், சென்னை

2. இரண்டாம் பரிசு - கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

3. மூன்றாம் பரிசு - ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

4. முதல் சிறப்பு குறிப்பு (Special Mention) விருது - கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

5. இரண்டாம் சிறப்பு குறிப்பு (Special Mention) விருது - TIPS கல்லூரி

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...