கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் மொழி மற்றும் இலக்கியம் குறித்த சர்வதேச மாநாடு!

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை மற்றும் இ.எல்.டி அட் ஒன் உடன் இணைந்து "மொழி மற்றும் இலக்கியத்தில் புதிய அலைகள்'' என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


கோவை: ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில், சர்வதேச மாநாடு நடைபெற்றது.

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை மற்றும் இ.எல்டி.அட் ஒன் உடன் இணைந்து "மொழி மற்றும் இலக்கியத்தில் புதிய அலைகள்'' என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

இதில், இ.எப்.எல், இ.எஸ்.எல். மின்-கற்றல் ஒருங்கிணைப்பாளரும், ஓமன் பயன்பாட்டு அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆலோசகர் மற்றும் பேராசிரியருமான டாக்டர் ஜஸ்டின் ஜேம்ஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் டாக்டர் ஜஸ்டின் ஜேம்ஸ், 21 ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தல் மற்றும் உலகளாவிய குடியுரிமைக்கு தயாராகுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மேலும் இந்த நிகழ்வில், கௌரவ விருந்தினராக புரூனேவில் உள்ள யூ.டி.பி கல்வி நிறுவனத்தின் முன்னாள் டீன் டாக்டர் அனில் பதக் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கல்லூரி முதல்வர் ஆர்.ஜெகஜீவன், துணை முதல்வர் மற்றும் மொழிகளின் டீன். ஆர்.விஜய சாமுண்டீஸ்வரி, ஆங்கில துறையின் இணைப் பேராசிரியர் மற்றும் திட்ட பொறுப்பாளர் எஸ்.ஹென்றி கிஷோர் ஆகியோர் பேசினர்.

இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...